பக்கம் எண் :

விளக்கவுரை45


தமிழ்க்குக் கொள்க. மைந்தர் - மஞ்சர் எனப் போலியாய் நின்றது. மைந்தர்
என்றது ஆண் பெண் என்ற குழந்தைகளை. பத்துப் பருவம் இட்டு
வளர்த்தாய் என்றது, காப்புப் பருவ முதலாகக் கூறும் பத்துப் பருவங்களையும்
இயற்றிப் பிள்ளைத் தமிழ் என்ற பேரிட்டு ஆடவர் பெண்டிர் என்ற
மக்களைப் புகழால் வளரும்படி செய்தாய் என்ற கருத்தினையுட் கொண்டது.
தமிழை வளர்க்கின்றேன் என்று கூறுவது பொய்யுரையும் புனைந்துரையுமாம்
என்பது விளங்க “உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ” என்றார், நினையும்
படிப்பு - எண்ணுங் கல்வி, கலை, எல்லாம்: எல்லாவற்றையும் உணர்வதற்கு
எனச் சொல் வருவித்துக் கொள்க. மக்களை வளர்ப்பது போல வெளியே
பொருள் தோன்றுமாறு பருவஞ்செய்து வளர்க்கு நாள், தொட்டிலிற் கிடத்தி,
தாலாட்டி, மஞ்சட் குளிப்பாட்டி, மையிட்டு, முப்பாலும் மிகப் புகட்ட நீ
வளர்ந்தாய் என்ற சொற்சுவை காண்க. முப்பால் என்பதும் பிள்ளைகட்குப்
புகட்டும் தாய்ப்பால், பசுப்பால், ஆட்டுப்பால் எனப் பொருள் தருமாறு
புணர்ந்திருப்பதும் காண்க.

     27 - 34 : புனைதருநற்...................மகிழ்ந்தாயே

     (பொ - ரை.) அணிசெய்கின்ற செய்யுட்குரிய சொற்கள் நான்கும்,
உயர்ந்த செந்தமிழ்ச் சொற்கள் நான்கும், மெய்யாகிய உட்பொருளில்
எழுவகைத் திணைகளும், குற்றமில்லாத எழுத்து முதலாகிய யாப்பின்
உறுப்புக்கள் எட்டும், அலங்காரம் முப்பத்தைந்தும் இயைந்து வேறுபட்டுப்
பேரழகு வாய்ந்த மாப்பிள்ளையாகிக் குலமாகிய அப்பாவின்கண் அமைந்த
செப்பலோசையும், அகவலோசையும், துள்ளலோசையும், தூங்கலோசையும்
ஆகிய பண்கள் பட்டத்துத் தேவியராகவும், உயர்ந்த மனத்தாலாய்ந்த ஐந்து
கருவிகளைப் பெற்ற நூற்று மூன்றாகிய பண்களும் பின்னர் வரைந்த
மனப்பாவையராகவும் கொண்டு மதிக்கப்படும் நல்ல ஆதரவால் ஒன்பது
சுவையாகிய மக்களைப் பெற்றெடுத்தாய், பெருமையாகிய வாழ்வினைப்
பெற்றாய்; பொருந்தி நின்னைவிட்டு நீங்காத பண்கள் முதலாகிய
பெண்டிர்களொடும் பிள்ளைகளொடும் நாடகமாகிய பெண்கள்