அகவலோசை அகவற்பாவிற்குரியது.
துள்ளலோசை கலிப்பாவிற்குரியது.
தூங்கலோசை வஞ்சிப்பாவிற்குரியது. இந்நான்கு பண்களையும் தமிழ்
மணமகனுக்குப் பட்டத்து மனைவியராக உருவகப்படுத்தினர். தோகையர் -
மயில்போன்ற சாயலுடையவர் என்ற காரணப் பெயர்; இஃது இடுகுறியளவாய்ப்
பெண் என்ற பொருள் தந்தது. மனத்தெண் கருவி ஐந்து என்றது, தோற்
கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி
என்பவற்றை. மனத்து எண்கருவி என்பதை மனத்தால் எண்ணப்படும்
கருவியென்றாவது, மதிக்கப்படுங் கருவியென்றாவது பொருள் கொள்க.
ஈன்றிடும் - பெற்ற. இடு: துணைப் பகுதி. ஐங்கருவிகளுங்கூடிப் பெற்ற நூற்று
மூன்று பண்கள் என்க. இசையரங்கில் ஐவகைக் கருவிகளும் அமைத்துப்
பாடுமுறை சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையிற் காண்க. குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசைகளையும் ன்னிரு
காற்றிரிக்கப் பன்னிரு பாலை பிறக்கும் எனவும், ன்னிரு பாலையினுரு
தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக்
காரணமாமெனக் கொள்க எனவும் அடியார்க்கு நல்லார் உரைப்பது அறிக.
(அரங்கேற்று காதை 70 - 94 உரை.) கல்யாணப் பாவையர் - வதுவைக்குரிய
பெண்கள். ஒரு தலைவனுக்கு மனைவியர் சிலர் என்பதும், பின் முறையே
அவன் காமக் கிழத்தியர் காதற் பரத்தையர் பலரை மணந்து வாழ்வான்
என்பதும் இலக்கிய மரபு. நம்பியகப் பொருளில் காதற் பரத்தையர், காமக்
கிழத்தியர் எனவும், அவருளும் வரைதற்குரியோருளரே எனக்
கூறியிருப்பதும் காண்க. எனவே நூற்று மூன்று பண்களும் மணமகனுக்குப்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர் எனக் கொள்க. ாடுமிசை
யெல்லாமுன் பாவையராச் சேர்த்தாய் என்பர் (164) பின்னும். இயல் இசை
நாடகம் என்ற முத்தமிழில் நடுநின்ற இசை சிறப்புடையது ஆதலின்
பண்களையெல்லாம் பெண்களாகக் கொண்டார்; பெண்கள் உடற்கு
இன்பந்தருவது போலப் பண்கள் செவிக்
|
|
|
|