பக்கம் எண் :

விளக்கவுரை48


கின்பந்தருவது குறித்து. எண்கொளும் - மதிப்புப் பெற்ற. தாரகம் - ஆதாரம்.
நவரசம் - ஒன்பது சுவை. இவை பண்கள் என்ற பெண்களை ஆதாரமாகக்
கொண்டு பிறந்த பிள்ளைகள். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம்,
அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என்பன பெயர். பண்களுடன்
பாடியபோதுதான் சுவை தோன்றும்; பண்களின்றிச் சுவை தோற்றுவித்தல்
இயலாது. நன்மகப்பேறு பெற்றவரே பெருவாழ்வு பெற்றவராவர் என்பது
தோன்றப் “பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே” என்றார். முற்கூறிய பெண்கள்
பிள்ளைகளுடன் நாடகமாகிய கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாய் என்க.
நாடகத்தைக் கொலுக்கூடமாக உருவகம் கொள்க. பெண்கள் கூடிய கொலு
என அடையாக்குக. பெண்கள் மிகுதியாகக் கூடிய கொலு “பெண் கொலு”
என்க. கொலு - அரங்கு, நாடக மேடை. அட்டாதசம் - பதினெட்டு; அட்டம்
- எட்டு; தசம் - பத்து. எட்டுடன் சேர்ந்த பத்து என்க. வன்னனை -
வருணனை என்ற வடமொழியின் சிதைவு. சிறப்பு என்பது பொருள். மலை,
கடல், நாடு, நகர், பெரும்பொழுது ஆறு, சிறுபொழுது ஆறு, சூரியன் சந்திரன்
ஆகியவை. காப்பியங்களில் வருணிக்கப்படுவன பெரும்பாலும் இவை.
“லைகடனாடு வளநகர் பருவ, மிருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து”
என்றார் தண்டியாசிரியரும். தமிழே நீ இத்தகைய சிறந்த வாழ்வெல்லாங்
கண்டு மகிழ்ந்தாயே என்று தமிழின் சிறப்புரைத்தார். இங்ஙனம் உருவகம்
செய்த அருமை நனி பெரிதும் போற்றிப் பாராட்டற்பாலது.

     34 - 41 : ஆழநெடுங்..................பார்வேந்தோ

     (பொ - ரை.) ஆழமான நீண்ட அழகுடைய வையையாற்றி
லென்னுடைய அன்பர் சிவபெருமான் மேற்பட்ட கொடிய பிரம்படியைச்
செங்கோல் போல ஏற்றுக் கொண்டாய்! அடங்காத வலிமையுள்ள எமது
மன்னனே, பத்தென்று கூறுந் திசைக்குள்ளே நின்னாட்சி செல்லாத
இடமொன்றுண்டோ! இங்கே யுன் தேசம் ஐம்பத்தாறில் வழங்கும் திசைச்
சொற்கள் பதினேழும் குற்றமற நீ அரசு புரியவைத்த குறுநில மன்னர்களோ!
அலைவீசுகின்ற