நான்காரைச் சக்கரம்,
ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என்ற சித்திரப்
பாடல்களில் வைத்த முறைப்படி ஏந்தப்பட்டுச் சக்கரத்தின் வழிச் சென்று பின்
தேரின் மேலேறி எனக் கொள்க. சுழிகுளம் என்பது ஒரு சொல்லணி.
அஃதமைந்த பாவினிற்பதை நீந்தி என்றார். கூட சதுக்கம், மாலைமாற்று,
சதுரங்கபந்தம், முரசபந்தம் இவற்றின் பெயர் தோன்றுமாறும் ஒரு சக்கரவர்த்தி
வருமாறும் ஆக இருபொருள் தருவதையறிக. சுழிகுளம் - நீர் சுழிக்கின்ற
குளம் எனக் கொண்டு அரசன் அதில் நீந்தி வருவன் என்பது தோன்ற
நின்றது. சதுக்கம் - நாற்சந்தி. போந்து - வந்து. நாற்சந்தி வழிவந்து
என்பதொரு பொருள். சதுரங்கம் - நால்வகைப் படை. அவை யானை, தேர்,
குதிரை, காலாள். இவை விளங்க என்பது ஒரு பொருள் சதுராய் - நலமாய்,
சூழ்ச்சியாய். முரசம் கறங்க - பேரிகை முழங்க. மாலைமாற்று - மாற்றுமாலை;
பலவேறு வகைப்பட்ட பூ மாலைகள். வரம் - மேன்மை, உயர்வு. சங்கம் -
சங்கப்பலகை. முடிவேந்தர் சூழச் சங்கப்பலகையின் மேல் இருந்து வாழ்ந்து
என்க. சக்கர முன்பேந்தி என்பது முதல் முரசங் கறங்க என்பதுவரை தமிழின்
இயலுக்கும் அரசன் செயலுக்கும் ஏற்றவகை சொற்றொடர்களைப்
பொருத்தியிருப்பது காண்க. கோமூத் திரியே கூட சதுக்கம், மாலை மாற்றே
எழுத்து வருத்தனை, நாக பந்தம் வினாவுத் தரமே, காதை கரப்பே, கரந்துறை
செய்யுள், சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகமு மவற்றின்
பால எனச் சித்திரகவியின் பெயர் கூறியிருத்தல் காண்க. உரையாசிரியர்
விளக்கமும் எடுத்துக் காட்டும் ஆய்ந்தால் சித்திரப்பாவின் அருமை பெருமை
தெரியும்.
49 - 56 : அருள்வடிவாய்..................கீழ்க்கணக்கும்
(பொ - ரை.)
சிவபெருமான் திருவருளின் உருவமாகியுயர்ந்த
புகழ்பெற்ற மூவரும் பாடிய ஒருபா ஒருபஃதும், அப்பதிகங்களை யுரைத்த
வாதவூராளி பாடலும், உயர்ந்த அம் மணிவாசகர் கூற்றாகச் சிவபெருமான்
எழுதிய திருக்கோவையார் என்னும் நூலும், குற்றமில்லாத அம்மையார் பாடிய
சொல்லாகிய இரட்டைமணி மாலையும், தெளிவு பொருந்த எல்லார்க்கும்
|
|
|
|