பக்கம் எண் :

விளக்கவுரை53


பற்றாகிய இலக்கண நூற் சூத்திரங்களும், அவற்றையறிந்து கற்ற புலவர்கள்
பாடி வழங்கிய ஐம்பெருங்காப்பியங்களும், அரசர்க் குரியனவாக
எண்ணப்பட்ட நாடு நகர் முதலிய பதினெட்டு வகைச் சிறப்புக்களும்
தெரியும்படி பாடப்பட்ட பெருமை மிகுந்த பெருங்காப்பியங்களும்,
தில்லையையடைந்து இன்புற்ற சேரமான் அரங்கேற்ற அம்பலத்தான் மகிழ்ந்து
கேட்டு அன்புற்ற பொன்வண்ணத்தந்தாதியும், முன்னரே அன்னவர் பாடிய
பெருந்தமிழ் நூலாகிய மும்மணிமாலையும், பட்டினத்தார் பாமாலையாகக்
கோத்துச் சிவபெருமானுக்கணிந்த மும்மணிக்கோவையும், சான்றோர்கள் தந்த
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கெடுதல் இல்லாத கீழ்க்கணக்கும்.

     (வி - ம்.) மூவர்: ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவர்;
இவர்களே அருள்பெற்றுயர்ந்து புகழ்பெற்றவர் ஆதலின். ஒருபா ஒருபஃது
என்றது, ஒருவகையான பாவிற்கு ஒரு பத்துப் பாடல் பாடிய பதிகத்தை
யுணர்த்தியது. சில பதிகங்களில் ஒன்று இரண்டு கூடியும் குறைந்தும்
இருப்பினும் பெரும்பாலும் பத்துப்பா அமைந்திருப்பது நோக்கி ஒருபஃது
என்றார். ஒருபாவில் ஒருபஃது என்க. தேவார முழுவதையும் குறித்தது இது.
ஆங்கு: அசை. அவை - அப்பதிகங்களை. வாதவூராளி - திருவாதவூரிற்
பிறந்து நம்மை யாட்கொண்டவர்: மாணிக்கவாசகர், சொல்லும் - திருவாசகம்
என்ற நூலும். சிவபெருமான் தில்லையில் ஒரு மறையோராய் வந்து பாவை
பாடிய வாயாற்கோவை பாடுக என்று வேண்டி நின்று மணிவாசகர் கூறக்
கோவை நானூறும் எழுதித் “திருச்சிற்றம்பலமுடையான்” எனக்
கையெழுத்திட்டு வைத்து மறைந்தார் என்ற வரலாறு தோன்ற “அவன் கூற்றா
யரனெழுதுங் கோவை” என்றார். தாய் என்றதுகாரைக்காலம்மையாரை.
அம்மையே என்று சிவபெருமான் அழைக்கும் பெருமையுடையவர் என்பதைக்
காட்டியது. மாற்றுசொல். பதினோராந் திருமுறையில் உள்ள திருவிரட்டைமணி
மாலையெனக் கொள்க. இலக்கண நூற்பா என்றது தொல்காப்பிய முதலிய பல
இலக்கண நூல்களினுள்ள சூத்திரங்களையெல்லாம் குறித்தது. சூத்திரங்கள்
எனவே அவற்றாலமைந்த எல்லாவிலக்கண நூல்களையும்