எடுத்துக் கூறியதாயிற்று.
நூற்பா வறிந்து என்றது, மேற்கூறிய இலக்கண
நூல்களை யாய்ந்து என்ற பொருளைத் தந்தது. அகரச் சுட்டு வருவித்துக்
கொள்க. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி என்பவற்றைப் பஞ்ச காப்பியம் என்றார். கொற்றவர் - மன்னர்.
பெருங்காப்பியங்களில் பாட்டுடைத் தலைவனை மன்னனாக வைத்து நாடு,
நகர் முதலிய பதினெட்டுவகைச் சிறப்புங் கூறுவது வழக்கம் ஆதலின்
கொற்றவருக்கெண்ணிய என்றார். மற்றவர் எவர் தலைவராயினும்
பதினெட்டுவகைச் சிறப்பும் பெருங்காப்பியங்களில் வருமென வறிக.
வன்னனை - வருணனை - சிறப்பு; புகழ்ச்சி. பதினெட்டும் முன்னர் எடுத்துக்
காட்டியவை. கண்ணியம் - பெருமை. தில்லையை நண்ணியேயென வருவிக்க.
அம்பலத்தான் மகிழ்ந்து அன்புறு என மாற்றுக. சேரமான் பெருமாணாயனார்
பொன் வண்ணத் தந்தாதி தில்லையில் அரங்கேற்றப்பட்டதென்ற வரலாறறிக.
முன்பு என்றது அரங்கேற்றுவதற்கு முன்னர் எனப் பொருள்தந்தது. மாத்தமிழ்
- பெரிய நூல். பட்டினத்தார் பாடியது திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.
மும்மணி மாலை எனக் கூறியது திருவாரூர் மும்மணிக்கோவையைக்
குறிக்கும். சேரமான் பாடிய நூல் அதுவேயாதலின். மூத்தோர்கள் என்றது
கிழப்பருவமுடையோரை யன்று. அறிவில் முதிர்ந்தோரை. இது பத்துப்பாட்டு
முதலிய நூல்கள் பாடிய புலவர் அனைவரையும் குறித்ததாம். ஒருபஃதும்,
சொல்லும் என நூல்களையெல்லாம் உம்மை கொடுத்தெண்ணிப் பின்
மெய்காப்ப (60) என முடிக்கின்றார். இன்னுஞ் சில நூல்களை எண்ணுவது
காண்க.
56 - 61 : ஆடகமா..............................கவிதையே
(பொ - ரை.)
பெரிய பொன் மலை போன்ற திருமேனியுடையவராகிய
ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவரிடத்தில் இரட்டையர் என்ற புலவர்கள்
கற்பனையாகப் பாடிய கலம்பகம் என்ற நூலும், தூசிப்படை (முன்னணிப்
படை)யுடன் சென்று வலிமையாற் கலிங்கநாட்டினையழித்துப் போரில் ஆயிரம்
யானைகளைக் கொன்ற வென்றியைக் குறித்துப் பாடிய புலவராற்
|
|
|
|