|
|
அஃதாவது, பகற்குறிக்கண் வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடுபட்டுப் போதல்.
|
| 1`விலக்கல் சேறல் கலக்க மென்றாங் கிகப்பின்மூ வகைத்தே பகற்குறி இடையீடு`
|
என்னுஞ் சூத்திரவிதியாற் பகற்குறி இடையீடு மூவகைப்படும். |
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் : |
| புனமும் பசுந்தினைச் செங்குர லேந்தும் புகன்றகிள்ளை இனமுங் குழீஇவந் திறைகொள்ளு மாலிறை யார்வளையும் மனமுங் கவர்வெற்ப வாணன்தென் மாறை மடப்பிடியும் அனமுந் தொழுநடை பாற்பல கால்வரு மன்னையுமே.
|
(இ-ள்.) தலைவி கையின்கண் நிறைந்த வளையும் அவள் மனமும் இரண்டையுங் கவர்ந்து கொள்ளும் வெற்பனே! இப்புனமும் பசிய தினையினது முற்றிச் சிவந்த கதிரை யேந்தி நிற்கும்; இவள் சொல்லைப்போற் சொல்லப்பட்ட கிளியினமும் கூடிவந்து தங்கும்; வாணன் தென்மாறை நாட்டு மடப்பதோடு கூடிய பிடியும் அன்னமும் தொழும் நடையினை யுடையாள் பக்கல் அன்னையும் பல்கால்வரும் என்றவாறு.
|
எனவே, தலைவியும் புனம்விட்டு நீங்கத்தகாதாளல்லள், நீயும் இங்கு வாரற்க எனக் குறிப்பாற் பெறப்பட்டது.
|
குரல் - கதிர்; குழிஇ வருதல் - பலபல தொகுதியாய்க் கூடி வருதல். இறைகொள்ளுதல் - தங்குதல். இறை: கை; ஆகுபெயர். தொழுநடை: ஆகுபெயர். கவர்தல் - கொள்ளுதல். |
(156) |
இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல் : |
| நந்துசுற் றுங்கடல் ஞாலமெல் லாம்புகழ் நாமன்வளர் சற்றுசுற் றுங்கொங்கை மங்கையர் வேள்சஞ் சரீகநறை வந்துசுற் றுந்தொங்கல் வாணன்தென் மாறை வரையின்மலர்க் கொந்துசுற் றுங்குழ லாய்செல்லல் நீயக் குளிர்பொழிற்கே.
|
(இ-ள்.) சங்கு சுற்றுங் கடல்சூழ்ந்த வுலகமெல்லாம் புகழப்பட்ட பெயரைப் படைத்த நாட்குநாள் வளருந் தகைமையை யுடைய சந்தனந்திமிருங் கொங்கையையுடைய மங்கையர்க்கு வேளையொத்த சஞ்சரீகம் மணத்தால் வந்து சுற்றுந் தொங்கலை யணிந்த வாணன் |
|
அகப்பொருள் விளக்கம், களவியல் - 38. |