|
|
தென்மாறை வரையிடத்துள்ள மலர்க்கொத்துச் சுற்றிய குழலாய், குளிர்ந்த பொழிலிடத்து நீ செல்லற்க என்றவாறு.
|
நந்து - சங்கம். நாமம் - பெயர். சந்து - சந்தனம். சுற்றல் - திமிர்தல். சஞ்சரீகம் - வண்டு. நறை - மணம். கொந்து - கொத்து. மெலிந்து நின்றது. `நாமன் வேள்` என்னும் வினைக்குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்த் திரிந்து நின்றன. |
(157) |
இறைமகளாடிடம் நோக்கி யழுங்கல்: |
| 1அருவித் தடமு மணிமுத்த யாறு மவனியெங்கும் திருவித் தியதஞ்சை வாணன் சிலம்புமிச் சிற்றிலும்பேர் இருவிப் புனமுமின் றென்னினைக் கின்றன வென்னையின்னே மருவிப் பிரிபவர் போலில்லை யேமண்ணில் வன்கண்ணரே.
|
(இ-ள்.) சிற்றருவி வந்து விழும் பொய்கையும், ஒழுங்காய முத்துக்களைக் கொழித்துவரும் பேரருவி யாறும், புவியெங்குஞ் செல்வத்தையே வேளாண்மையாய் விதைக்கப்பட்ட வாணனது சிலம்பும், இச்சிற்றில்லமும், பெரிய தாளையுடைய தினைப் புனமும், இன்று என்னை யென்னாக நினைக்கின்றனவோ, இப்போது பலநாளும் மருவிப் பிரிபவர்போல் உலகன் வன்கண்ணர் இல்லை என்றவாறு. |
உம்மை: எண்ணும்மை. தடம் - பொய்கை. இருவி - தினைத்தாள். இன்னே - இப்போது. வன்கண்ணர் - கொடியர். அழுங்கல் - தன்னுள் இரங்கல். |
(158) |
பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண் டகறல்: |
பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்டகறல் என்பது, பாங்கி விளையாடுமிடம் விட்டு நீங்கித் தலைவியைக் கொண்டு தம்மூர்க்குப் போதல்.
|
| உன்னைய ராவல்கு னல்லவ ரேயென் றுசாவினெங்கள் மன்னைய ராமல் வகுத்துரை நிதஞ்சை வாணன்வெற்பின் என்னைய ராணைகொண் டேகுநின் றேனிவை பியத்தனையும் பின்னைய ராதொழி வாயித ணேயிது பெற்றனமே.
|
(இ-ள்.) பரணே! நீயும் யானும் இந்தப் பிரிவைப் பெற்றனமே, உன்னை யெங்கள் மன்னாகிய தலைவர் வந்து அரா வல்குல் நல்லவர் எங்னே யென்று உசாவில், அயர்ச்சியடையாமல் நீ வகுத்துச் சொல்வாய்; தஞ்சைவாணன் வெற்பில் என்னையர் ஏவலால் தலைவியைக் கொண்டு ஊர்க் கேகுகின்றனன்; ஆடிடம் நோக்கி யழுங்கியதும், ஆடிடம் விடுத்துக் |
|
1. இறையனார் அகப்பொருள் - 3. |