பக்கம் எண் :

கட
153
பகற்குறி இடையீடு

 
       கொண     டகறலும்,   உன்னுடன்     சொல்கின்ற    சொற்களுமாகிய
இவையித்தனையும் பின் மறவாதொழிவாயாக என்றவாறு.

  சின்னாண் மலர்க்குழல் காரண மாச்செவ்வி பார்த்துழன்று
பன்னா ளுரைத்த பணிமொழி நோக்கிப் பழிநமக்கீ
தென்னா திடைப்பட்ட வென்னிலை நீமற வேலிறைவா
தன்னாக மெய்ப்புக ழான்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.

     `நல்லவர்`  என்புழி,  `எங்கே`  என  வருவித்து  உரைக்க.  `அராவல்குல்`:
உவமைத்தொகை. ஓகாரம்: அசைநிலை. உசாதல் - வினாதல். அயர்ச்சி - தளர்ச்சி.
என்னையர்: ஈன்றோர். ஆணை - ஏவல். அயர்தல் - மறத்தல். இதண் - பரண்.
(159)    
      இத்துணையும் ஆறாநாட் செய்தியென்றுணர்க.

பின்னாள் நெடுந்தனை குறிவயின் நீடுசென் றிரங்கல்:
பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல் என்பது, ஏழாநாள் தலைவன்
குறியிடமாகிய மாதவிப்பந்தரிடத்து வந்து நீட்டித்து நினைந்திரங்கல்.

 மான்காள் நிகரில் மடமயில் காள்தஞ்சை வாணன்வெற்பில்
தேன்காள் திரைமென் சிறைக்கிள்ளை காளென் தெருமரல்நோய்
தான்கா ணியகொலிச் சந்தனச் சோலையைத் தன்னையின்றி
யான்கா ணியகொல் எழுந்தரு ளாததின் றென்னுயிரே.

(இ-ள்.) மான்காள்! உவமையில்லாத மடப்பத்தையுடைய மயில்காள்! தஞ்சைவாணன்
வெற்பிடத்திருக்கின்ற வண்டுகாள்! ஒழுங்காய் வருகின்ற  மெல்லிய  சிறகையுடைய
கிளிகாள்!   இன்று  என்னுடைய  சுழலும்  வேட்கை  நோயைத்   தானறியவோ,
இச்சந்தனச்  சோலையிற் கரந்திருக்கின்ற தன்னை இன்று யான்  தேடிக்காணவோ,
என்னுயிர்போல்வாள் எழுந்தருளாதது என்றவாறு.

தெருமரல் - சுழற்சி. `சோலையை` என்புழி வேற்றுமை மயக்கம். உயிர்: ஆகுபெயர்.
(160)    
பின்னாள் நெடுந்தனை குறிவயின் நீடுசென் றிரங்கல்:
      தலைவன்   வறுங்கள   நாடி   மறுகல்   என்பது,   தலைவி   யில்லாத
தினைப்புனத்தை நோக்கி வருந்துதல்.

  செங்கேழ் விழிக்கு மொழிக்கும் பகைதிருப் பாற்கடலும்
பங்கே ருகமும் பயந்தன வாயினும் பைங்கிள்ளைகாள்
சங்கேய் தடந்துறை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
எங்கே யினித்தங்கு வாரேனல் காத்திங் கிருந்தவரே.

      (இ-ள்.) பைங்கிளிகாள்!   செவ்வரி   பொருந்திய  விழிக்கும்  மொழிக்கும்
தாமரையும் திருப்பாற்கடலும் மாதரைப் பெற்றனவாயினும் பகையாயின