பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
140

 
வாதலால்,  தினைப்புனங் காத்திருந்தவர் சங்குபொருந்திய பெரிய  வைகைத்துறை
சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல் இன்று எங்கே தங்குவார் என்றவாறு.

இது மொழிமாற்று நிரனிறை.

  `ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு மூரகமும் பஞ்சரமாய் - நீடியமால்
நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு`

என்றாற்போல, நிரனிறை மொழிமாறி நின்றது.

     கேழ் - நிறம்.         பங்கேருகம் - தாமரை.         இடமாயினதன்றி,
பயந்ததின்றேயெனின்,   சீதை   இலங்கையில்    பொய்கைத்       தாமரையிற்
பிறந்தாளென்பது இராமர்  கதையிற்  கண்டுகொள்க.   துறை - வைகைத்  துறை.
தரியலர் - பகைவர்.     ஏனல் - தினை.    `கோடாப் புகழ் மாறன்`   என்னுஞ்
செய்யுளும், `வறுங்களநாடி மறுகல்` என்றே கொள்க.
(161)    
குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல்:
     குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் என்பது,  தலைவியின் ஊர்
தேடிச் சேறுமெனில், அறிந்திலம், என்று மதி மயங்கிக் கூறல்.

  பெறவரி தாலவன் பின்சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு
மறவரி தானன்ன வாணன்தென் மாறை வரைப்புனஞ்சூழ்
நறவரி தாழ்முல்லை நாண்மல ரோதி நகருமெனக்
குறவரி தாமென்செய் வேனென்று சோருமென் னோருயிரே.

     (இ-ள்.) அவளைப்  பெறுதல் அரிதாயதுமன்றி  அவள்பின்னே  தொடர்ந்து
சென்ற   நெஞ்சமும்  மீட்டு  நாம்  பெறவேண்டுமெனிற்  பெறுதற்கு  அரிதாயது;
பகைவர்க்கு  வீரம்  பொருந்திய  சிங்கத்தை  யொத்த   வாணன்    தென்மாறை
வரைப்புனஞ் சூழ்ந்த கள்ளால் வண்டு தாழப்பட்ட, முல்லை நாண்மலரை யணிந்த
குழலையுடை யாளது நகரும் எனக்கு உறுதற்கரிதாதலான்,  என்செய்வேன்  என்று
என்னொப்பற்ற உயிர் சோராநிற்கும் என்றவாறு.

     எனவே இதற்குச் செய்யுமா றறிந்திலேனென மதிமயங்கிக் கூறியவாறாயிற்று.

     மதி - அறிவு. ஆல்: அசை.  பேணலர் - பகைவர்.  மறவரி - வீரச்சிங்கம்.
சூழ்ந்த என்னும் பெயரெச்சம் `நகர்` என்னும் பெயர்கொண்டு