வாயிற்று. `வளரட்டாவதானி` என்றது ஏதுப் பொருண்மைக் கண் வந்த வினைத்தொகை. |
| 2`தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார் தோன்றலில் தோன்றாமை நன்று` |
என்னும் திருவள்ளுவர் கூறிய திருக்குறளினது பயனுக்கு உதாரணம் இவன் என்பது பெற்றாம்.முன்னை நல்வினையுண்மையாற் பிறந்த நுண்ணறிவான் இவன் காண்டலாற் சங்கையின்றென்பது தோன்ற, `காணும் அகப்பொருள்,` என மாறிப் பிறர்க்குத் தோன்றும் என வருவித்து உரைக்க. நிரம்பிய இலக்கண முணராதார் தாம் வேண்டியவாறே கூறிய கூற்றைத் தன்மொழியான் நீக்கி மாசுண்ட மணியைத் துடைப்பார் போன்று செய்தான் என்பது, `விளக்கினன்` என்பதனாற் பெற்றாம். `குன்றத்தூர்ச் சொக்கன் கையார் கனிபோல் கோவைக்கு உரையெழுதி விளக்கினன்` என ஒரு தொடர் ஆக்குக. |
`பொய்யா` என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், `மொழியார்` என்னும் வினைக்குறிப்புப் பெயரது முதனிலையாகிய, `மொழி` என்னுங் கருவிப் பெயர் கொண்டு முடிந்தது. `புகலும்` என்னும் பெயரெச்சம், `கோவை` என்னுஞ் செயப்படுபொருள் கொண்டது. `வாணன் கோவை` என்றவழி ஆறாம் வேற்றுமை செய்யுட் கிழமைக்கண் வந்தது. `சோலைக் குன்றத்தூர்` என்பது உருபும் பொருளும் உடன்தொக்க தொகை. `அட்டாவதானி` என்பது வடசொன் முடிபாகிய குறிப்புவினைப் பெயரெச்சக் குறிப்பாய்ச், `சொக்கன்` என்னும் பெயரோடுஇயைந்தது; இது, |
| 2`குறிப்புமுற் றீரெச்ச மாசுலு முளவே` |
என்னும் விதிபெற்றது, நச்சினார்க்கினியர், `எச்சம் முற்றாதலன்றி முற்று எச்சமாகாது` என்று கூறினாராலோ எச்சங்கண்டன்றே முற்றாய்த் திரிந்ததென்று சொல்லுதல் கூடுவது, அது காணாது முற்றே கூறினமையால் என்க. |
கை என்பது ஆகுபெயர்.போல் என்னும் உவமவுருபு வினை யுவமத்தின் கண் வந்தது. தொல்காப்பியநூல் என்ற வழி மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்தொக்க தொகை. நிலைமொழி யீறு திரிந்து கருத்தனாகு பெயராய்ப் பண்புத் தொகை யாயிற்றெனினும் இழுக்காது. |
உரைத் தற்சிறப்புப் பாயிரம் |
முற்றிற்று. |
|
2. திருக்குறள் : புகழ் - 6. 2. நன்னூல், வினையியல் - 32. |