| | அவையிரண்டும் மணமாகா; அஃதென்னை யெனின், உலகியல்பின்கண் தாய்தமர் அறியாது, மணச்சடங்கும் இன்றி ஒருவன் உரிமை கருதித் தாலிகட்டு மணம் மணமென்று உலகின்கண் உள்ளார்கைக்கொள்ளார்; அவர்க்கே மீண்டும் மணச்சடங்குடனே மணமுடிப்பார்; ஆதலால், அந்தணர் முதலாயினாரை முன்னிட்டு அவன் மனையின் மணச்சடங்குடனே முடித்தலின், இதுவே மணமாயினவாறு உணர்க. இவ்வாறு நாள்முறையாய்க் கூறிவந்து, ஐம்பத்தாறாநாள் மணம் முடிந்ததென்று கூறியது என்னையெனின், | | 1`திங்க ளிரண்டி னகமென மொழிப` | என்னும் அகப்பொருட் சூத்திரத்து உரையில், இருதிங்களும் நாலு நாளிருக்க மணமுடிப்பது இயல்பென்று இலக்கணங் கூறினமையாற் கூறியதென்று உணர்க. | (366) | வரைதல் முற்றிற்று. இரண்டாவது வரைவியல் முற்றிற்று. |
| 1. இறையனாரகப்பொருள் - 32. | | |
| |