பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
60

 
  வாயில்பெற்றுய்தல்:

வாயில்பெற்று   உய்தல்   என்பது,   தலைவி  ஆயக்கூட்டத்திற் செல்லும்போது
உயிர்ப்பாங்கி   முகத்தை   நோக்கிச்  செல்ல அறிந்து, அவ்  வுயிர்ப்பாங்கியைத
் தலைவன் தூதாகப் பெற்று உய்வதாகக் கூறல்.

வாயில்  எனினும்,  தூது எனினும் ஒக்கும். பக்கத்திற் பிரியா திருத்தலான்  பாங்கி
யென்று பெயராயிற்று.

இடந்தலைப்பாடும்   பாங்கற்   கூட்டமும்   கூறி,   மதியுடம்பாட்டில்   அறியும்
பாங்கியை ஈண்டு அறிந்ததாகக் கூறவேண்டிய தென்னையெனின், மதியுடம்பாட்டில்
வாயில்பெற்று இரவு வலியுறுத்திக் கண்ணியும் தழையும் ஏந்திச்சென்று, ஊர் பெயர்
முதலிய வினாவுழிப்   பாங்கியை  அறிதற்கெனக்  கொள்க. ஈண்டு அறியாவிடின்,
இடந்தலைப்பாடு     பாங்கற்கூட்டத்தில்    அறியும்   இடமின்று;    ஆதலான்,
இவ்வாயில்பெற்று    உய்தற்கும்,   அவ்வாயில்  பெற்று  இரவு  வலியுறுத்தற்கும்,
`மாட்டேற்றுப் பூட்டு` என்று உணர்க.

 பெருமால் மருந்தொன்று பெற்றனம் யாநெஞ்சம் பேதுறல்பார்
மருமான் வரோதயன் வாணன்தென் மாறை மணங்கமழ்பூந்
திருமான் முகமலர்ச் சேயரி பாய்கயல் சென்றுசென்றவ்
வொருமா னகைமுக மாமல ரோடை யுலாவருமே.

(இ-ள்.) நெஞ்சமே,    பாரின் வழித்தோன்றி வரத்   துதித்தவனாகிய  வாணனது
தென்மாறை நாட்டு மணநாறும் பூவிலிருக்கப்பட்ட  திருமகள் போன்ற தலைவியது
முகமலரின் கண்ணுள்ள செவ்வரி பரந்த கயல்போன்ற கண்கள்  போய்ப்  போய்ப்
பாங்கியது    ஒளிபொருந்திய  முகமாகிய    மலரோடையுள்   உலாவிக்கொண்டு
வருதலான்,   நமது   பெயிா   மாலாகிய   நோய்க்கு    மருந்தொன்று    யாம்
அறியப்பெற்றனம்; இம்மருந்தினான்    அந்நோய்   தீரும்,     மயங்கல்வேண்டா
என்றவாறு.

எனவே,    தலைவிநோக்குத்   தலைவற்கு   உயிர்ப்பாங்கியை   அறிவித்தவாறு
கண்டுகொள்க. `மருந்தொன்று யாம்அறியப் பெற்றனம்` என இயையும், பேதுறல் -
மயங்கல்.     நெஞ்சம் : அண்மை   விளி.   மருமான் -  வழித்தோன்றியோன்;
அவ்வழியை வளஞ்  செய்தல் இயல்பாதலான், `பாரின்வழித்தோன்றி` எனப்பட்டது;
பூமிபாலகன்    எனினும்     அமையும்.   `மருமான்`   என்னும்   வினைமுற்று
வினையெச்சமாய்   நின்றது.   திருமானும் கயலும்  ஆகுபெயர். `சென்று சென்று`
என்பது அடுக்கு. அவ்வொருமான் - உயிர்ப்பாங்கி. அதிகாரம், `பிரிவுழிக்கலங்கல்`
என வைத்துக், `கலங்கல்` கூறாது, `உய்தல்` கூறியது என்னையெனின்,