(அ-ரை) அவணி பருகிய மால்-ஊழிக்காலத்து
உலகம் உண்ட திருமால்.
உந்தி-உந்திக்கமலம், கொப்பூழ். தவளமுளரி-வெண்டாமரை. இறைஞ்சுதும்-வணங்குவோம்.
உவரி-கடல், உவர்ப்புடையது, பௌவம். உரகன்-ஆதி
சேடன், உலைய-கெட. மாருதம்-காற்று. கவரில்-பிளப்பில்,
வெடிப்பில்,
வளை-சங்கு. சூல்-கருப்பம். கமடம்-ஆமை. அலைவாய்-திருச்செந்தூர்.
(5)
அரிகரபுத்திரன்
வரியு நீள்சடி லத்திடை மகுட ராசித ரித்தவர்
வளையு நீடுக ருப்புவில் மதுர வாளிதொ டுத்தவர்
அரிய பூரணை புட்கலை அரிவை மார்இரு பக்கமும்
அழகு கூரும கிழ்ச்சியர் அடிவிடி டாமல்வ ழுத்துதும்
உரிய நான்மறை நித்தலும் உறுதி யாகவ ழுத்திய
உவமை யாசுக வித்துறை உதவு நாவலன் முற்றிய
பரிய வாளைகு தித்தெழு பரவை சூழுந கர்க்கிறை
பழநிவேலவ னைப்புகழ் பனுவல் மாலைத ழைக்கவே.
(அ-ரை) சடிலம்-சடை. மகுடராசி.
கிரீடக்கூட்டம். வாளி-அம்பு. பூரணை
புட்கலை-ஐயன் தேவிகள். பரவை-கடல் ஆசுகவி-பொருளடி பாவணி
முதலியன கொடுத்து விரைந்து பாடுக எனப் பாடும் கவி. மற்றைக் கவிகள்
மதுரம், சித்திரம், வித்தாரம்
எனப்படும்.
(6)
பகவதி
விளையுஞ் செழுந்தேன் உடைந்துமுகை விண்டொழுகு
வெண்டா மரைப்பொகுட்டு
|