பாயுந் தழற்புகைப் பாலைக் கிழத்திவெம்
பண்ணம் பணத்திமோடி
பரசுதரன் உடன்நடனம் இடுசூலி சாமுண்டி
பாதார விந்தநினைவாம்
ஆயும் பெருபனுவ லாசுகவி மதுரகவி
அரியசித் திரகவிதைவித்
தாரகவி இடுமுடிப் புக்குள மயங்காமல்
அடியவர்க் கருள்குருபரன்
தேயும் பனிப்பிறைத் திருநுதற் கடல்மகளிர்
தெள்நித் திலங்கொழித்துச்
சிற்றில்விளை யாடல்புரி யுந்திருச் செந்தில்வரு
சேவகன் புகழ்பாடவே.
(அ-ரை) காயும்-கோபிக்கும். தாருக விநாசினி-தாருகாசுரனைக்
கொன்றவள்.
கலையூர்தி-மானை வாகனமாக உடையவள். கங்காளி-முழு எலும்பு
அணிந்தவள். பாலைக்கிழத்தி-பாலைநிலத்தேவி.
மோடி-வனக்காளி. பரசுரன்-மழுவாளி. பாதாரவிந்தம்-அடிமலர். முடிப்புக்குஉளமயங்காமல்-முடிவுகளுக்கு
மனம் கலங்காதபடி, பனி-குளிர்ச்சி. நித்திலம்-முத்து. சேவகன்-வீரன்
(8)
ஆதித்தர்
வெள்ளப் பெருந்துளி இறைக்கும் பெருங்காற்று
வெண்டிரையின் மூழ்கியேழு
வெம்புரவி ஒற்றையா ழித்தடந் தேரேறி
வேதபா ரகர்இறைஞ்சப்
|