16 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
கவரியின் பருமுலைக் கண்திறந் தொழுகுபால்
கதிர்வெயிற் படமு ரிந்து
மங்காமல் இரசதத் தகடெனச் சுடர்விட
மலைக்குறவர் கண்டெ டுத்து
வண்தினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
மகளிருளம் ஊச லாடச்
செங்காவி விழுபருகு பன்னிருகை மேகமே
செங்கீரை யாடி யருளே
திரையெறியும் அலைவாய் உசுந்தவடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
(அ-ரை) வெங்காளகூடம்-கொடிய நஞ்சு.
பகுவாய்-பிளந்த வாய். மாசுணம்-பாம்பு, மணி-இரத்தினம். ஊழி-உகந்தகாலம். வேய்-மூங்கில்.
கங்காளர்-முழு
எலும்பணிந்த சிவபெருமான். கடுப்ப-ஒப்ப. சுவை-பிளப்பு. கவரி-எருமை.
முரிந்து-ஒடிபட்டு.
இரசதம்-வெள்ளி. வணிதினைக்கு எருஇடும்-வளவிய தினைப்பயிர்க்கு உரமாகப்போடும். ஊசல்-ஊஞ்சல்.
சாரல்-மலைப்பக்கம்,
அலைவாய்-கடலிடம். உகந்த- விரும்பிய.
(11)
கறைகொண்ட முள்ளெயிற் றுத்துத்தி வரியுடற்
கட்செவிப் பஃற லைநெடுங்
காகோ தரச்சிர நெளிக்கவட பூதரங்
கால்சாய மகரம் எறியுந்
துறைகொண்ட குண்டகழ்ச் சலராசி யேழுஞ்
சுறுக்கெழ முறுக்கெ யிற்றுச்
சூரன் பயங்கொளச் சந்த்ரசூ ரியர்கள்செந்
தூளியின் மறைந்தி டத்திண்
|