பொறைகொண்ட சுரர்மருவும் அண்டகோ ளகைமுகடு
பொதிரெறிய நிருதர் உட்கப்
பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்
புருகூதன் வெருவி வேண்டுந்
திறைகொண்ட ளக்கவரு மயிலேறு சேவகா
செங்கீரை யாடியருளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலவனே
செங்கீரை யாடி யருளே.
(அ-ரை) கறை-விடம், நஞ்சு; முள்எயிறு-முள்போன்ற
பல். துத்தி-புள்ளி. கட்செவி-கண்ணையே காதாகவுடையது; பஃறலை-பலதலை. காகோதரம்-ஆதிசேடனாகிய
பாம்பு. வடபூதரம்-வடமலை. சலராசி-நீர்த்திரள் சுறுக்குஎழ-வற்ற. செந்தூளி-சிவந்த தூசி.
கோளகை-வட்டம். பொதிர் எறிய-ஓட்டை பட, உட்க-பயப்பட. உட்கு என்னும் பகுதியடிப் பிறந்த
வினையெச்சம், கிரிமலை; திறை-கப்பம், வெருவி-பயந்து; அஞ்சி. வெருவு; பகுதி.
(12)
ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்
இலைகீழ் விழின்ப றவையாம்
இதுநிற்க நீர்விழின் சுயலாமி தன்றியோர்
இலையங்கு மிங்கு மாகப்
பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
பாதியுஞ் சேல தாகப்
பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்
படிகண்ட ததிச யமென
|