பக்கம் எண் :

செங்கீரைப் பருவம்

19

    கந்தமலி நெட்டிதழ்க் குறுமுகைக் பாசடைக்
கமலமல ரைக்க றித்துக்
கடைவாய் குதட்டும் புனிற்றெருமை தன்குழக்
கன்றுக் கிரங்கி யோடிக் 

கொந்தவிழ் கருங்குவளை ஓடைத்தத டாகக்
குரம்பைக் கடந்து செந்நெற்
குலைவளைக் கும்பழக் குலைமடற் கதலிக்
குருத்தற மிதித்து மீளப் 

பந்தரிடு சூலடிப் பலவுதரு முட்குடப்
பழமெலாம் இடறி வெள்ளைப்
பணிலஞ் சொரிந்தநித் திலமுறுத் தப்பதை
பதைத்துமுலை பாலு டைந்து

சிந்தமக ராழியலை யொடுபொருத செந்தூர
செங்கீரை யாடி யருளே
செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யருளே.

(அ-ரை) கந்தமலி - மணம் நிறைந்த, குறுமுகை - சிறிய அரும்பு. நெட்டிதழ்க் குறுமுகை என்பதில் சொல் முரண் அமைந்துள்ளது. பாசடை - பச்சிலைகறித்து - கடித்து. குதட்டும் - அதக்கும். புனிறு - இளமை. கொந்து - வாசனை. குரம்பு - கரை. கதலி - வாழை. பலவு - பலா “குறியதன் கீழ் ஆக்குறுகலும்” என்ற நன்னூல் சூத்திரப்படியாயிற்று. முட்குடப்பழம் - முள்ளயைுடைய குடம் போன்ற பழம் (பலாப்பழம்) இடறி - எற்றி. பணிலம் - சங்கு. உறுத்த - அழுத்த: பொருத - தாக்கிய, பதாகை - கொடி, செந்நிறக் குடுமி வெண்சேவல் - இவ்வடியில் சேவலின் கொண்டை நிறச் செம்மையும்,  உடைலில் வெண்மையும் விளங்கும்.                                   

(14)