20 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
வீறாட வெங்கதிர்ப் புகர்முகக் கூரிலை
மிகுத்தவே லுறை கழித்து
வெவ்வாய் பிளந்துசிறு கட்பேர் இடாகினிகள்
விளையாட வெங்க வந்த
மாறாட முதுபகட் டுயர்பிடர்க் கரியநிற
மறலிஇரு கைச லித்து
மன்றாட உடல்விழிக் குரிசல்கொண் டாடநெடு
மாகமுக டிடைவெ ளியறப்
பாறாட அம்பொற் கிரீடம் பரித்தலகை
பந்தாட விந்தா டவிப்
பாலைக் கிழத்திமுக் கவரிலைச் சூலம்
பசுங்கொழுங் குருதி வெள்ளச்
சேறாட வென்றுசிறு முறுவலா டுங்குமர
செங்கீரை யாடி யருளே
செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யருளே.
(அ-ரை) வீறு ஆட - பெருமை பாராட்ட.
கதிர்ப்புகர் - சூரியன் நிறம். கூர்இலை - கூர்மையான தகட்டுவடிவமுள்ள. இடாகினிகள் - துர்க்கை
ஏவற் பெண்கள். வெம் கவந்தம்-கொடிய உடற்குறைப் பிணங்கள். மாறுஆட-விரோத மாகக் குதிக்க.
பகடு-எருமைக்கடா. மன்றாட-வேண்ட, இரங்கிக் கேட்க. மாகம்-விண்; ஆகாயம். பாறுஆட-பருந்துகள்
விளையாட. உடல் விழிக்குரிசில்-மெய்யில் கண்களையுடைய இந்திரன். பரித்து-தாங்கி.
அலகை-பேய். விந்தாடவி-மலைக்காடு. குருதி-இரத்தம். சேறுஆட குழம்பு தோய. முறுவல் ஆடும்-புன்சிரிப்புச்
செய்யும்.
(15)
|