மகரசல ராசிதனில் வருணன்வந் தடிபரவி
வைத்தமணி முத்து மாலை
வடபூ தரத்தில்விழும் அருவியென உத்தரிக
மார்பிலூ டாடமன்னுந்
தகரமல ரிதழ்முருகு கொப்புளிக் குஞ்சிகைத்
தமனியச் சுட்டி ஆடத்
தவளமுழு மதியமுத துளியெனத் திருமுகத்
தரளவெயர் வாட முழுதும்
பகரவரு மறைமுனிவர் கொண்டாட மழுவாளி
பங்காளி திருமு லைப்பால்
பருகக் குழைந்துசிறு பண்டியுந் தண்டையும்
பாதமும் புழுதி யாடச்
சிகரவரை அரமகளிர் சிறுமறுவ லாடநீ
செங்கீரை யாடி யருளே
செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி யாருளே.
(அ-ரை) சலராசி-கடல். உத்தரிகம்-மேலாடை.
தகரம்-மயிர்ச்சாந்து. முருகு-வாசனை. தமனியம்-பொன். தவளம்-வெண்மை. தரள வெயர்வு ஆட-முத்துப்போன்ற
வேர்வையுண்டாக. மழுவாளி பங்காளி-மழுப்படை தாங்கும
சிவனுடைய செம்பாதியைப் பங்காகக் கொண்ட
உமாதேவி. பண்டி-வயிறு.
புழுதியாட-தூசிபடிய. சிகரம்-உச்சி, முகடு.
(16)
வேறு
இந்திர னுஞ்சசி யும்பர வும்படி
யிங்கே வந்தார்காண்
|