24 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
மலய முனியொடு பிரம முனிதொழ
வந்தார் கண்டாயே
கரையின் மணலிடு கழியில் நெடியக
லஞ்சே குஞ்சார்பிற்
கரிய முதுபனை அடியில் வலைஞர்க
ணஞ்சூழ் மென்கானில்
திரையில் வளைதவழ் நகரில் வருகுக
செங்கோ செங்கீரை
செருவில் நிசிசர திமிர தினகர
செங்கோ செங்கீரை
(அ-ரை) உரைசெய்-புகழ்கின்ற.
இமையவர்-தேவர். வரைசெய்-மலையை ஒத்த. மகளிர் எழுவர்-எழு கன்னிமார். கழி-கடல்நீர் கழிந்துநிற்கும்
இடம். கணம்-கூட்டம். வளை-சங்கு. செரு-போர். திமிரம்-இருள். தினகர-சூரியனே!
(19)
வேறு
குறுமுகை விண்ட நெட்டிலைத் தாழை
அடியில்வி ளைந்த முட்குடக் காயில்-இனிய
குவளை யோடையில் விண்தோ யுந்தேவர்
குணலைபு ரிந்த கற்பகச் சோலை
நிழலிடு பந்த ரிட்ட பொற்றூணில் - அளவர்
குடிலில் வாசலில் நின்றோடுந் தோணி
குழுவொடு வந்து விட்டிளைப் பாறு
துறைமணல் வண்ட லிடடுவற் றாத - பழைய
குமிழி வாலியில் வண்டா னந்தாவுங்
|