பெற்ற பார்வதி. குரவர்-பெற்ற மாதாபிதாக்கள், கோடாய்-கோணுதலில்லாதவனே!
தாள் தாளா!-முயற்சியுள்ளவனே! குதலை-மழலை மொழி. இரவலர்-யாசகர். முனியில்-கோபிக்கில்.
மணி-முத்து. பணிலம்-
சங்கு
(29)
வேறு
பங்கயன் முதலோர் இந்திரன் இமையோர்
பாரோர் ஏனோர்பார்
பண்புடன் உனையே சிந்தையின் நினைவார்
பால்நீ மால்கூராய்
வெங்கட கரிசூ ழெண்திசை நிறைவார்
வீணாள் காணாதே
மின்பரி புரதாள் பொன்புரை முடிமேல்
வேய்வார் வீறாலே
செங்கனி மணிவாய் தங்கி நகைதா
தேவா சீறாதே
திண்திறல் முருகா தண்டமிழ் விரகா
சேரார் போரேறே
சங்கரி மருகா சங்கரி சிறுவா
தாலோ தாலேலோ
சந்ததம் இயல்தேர் செந்திலை உடையாய்
தாலோ தாலேலோ.
(அ-ரை) பங்கயன்-பிரமன். மால்கூராய்-ஆசைப்படாய்
கூர்வாய் என்பது பாடமாயின் ஆசைப்படுவாய் என்க, வீணாள்-வீண்நாள்; பயனற்ற நாள். காணாதே-காணாமல்,
பொன்புரை-
|