பக்கம் எண் :

New Page 1

சப்பாணிப்பருவம்

37

வெயர்வு-சிறுவேர்வை. கரகமல மலர்-கையாகிய தாமரைப்பூ. கடககங்கணம் - கையணி. மீமிசை மொழி. கானல்-கடற்கரைச் சோலை, சமரமுகம்யுத்தகளம். ரணவீர-பகைவர்க்குப் புண்செய்யும் வீரனே திமிராரி-இருளைக் கெடுப்பவன். சப்பாணி-இரண்டு கையுங் கூட்டி.                                  

(31)

 

அண்டர் தந்துயரொழித் தனமென்று கொண்டாடி
ஆவலங் கொட்ட மன்னும்
அயிராணி கலவியமு துண்டனம் எனத்தேவர்
அரசிரு கரங்கள் கொட்டத்

துண்டவெண் பிறைபுரை எயிற்றுவெஞ் சூருளந்
துண்ணெனப் பறைகொட் டநீள்
சுருதியந் தணர்இடந் தொறுமங் கலப்பெருந்
தூரியங் கொட்ட முட்டப்

பண்டரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன
படிதிண்டி மங்கொட டவெம்
பகைநிசா சரர்வளம் பதிமுழுது நெய்தலம்
பறைகொட்ட வெள்வ ளைதருந்

தண்தரள மலைமொண்டு கொட்டுநக ராதிபா
சாப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே.

    (அ-ரை) ஆவலங் கொட்டுதல்-வாயல்துதித்து விளை யாடல் வெம்சூர் -கொடிய சூரன். பறைகொட்ட-பதைக்க, தூரியம்-வாச்சியம், திண்டிமம்-தம்பட்டம். நிசாசரர்-அசுரர், நெய்தலம் பறை-நெய்தல் நிலத்து வாச்சியம்; சாப்பறை. நகராதிபா- திருச்செந்தூர்த் தலைவனே.                            

(32)