4 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை)
களபம்-மணப்பொருள். புயபூதரம்-தோளாகியமலை. புருகூதன்-இந்திரன். ககனவெளி-ஆகாயவெளி,
முகடு-உச்சி. புத்தேள்-சிவபெருமான்.
முனி-அகத்தியன். தேசிகன்-ஆசிரியன். குரைகடல்-ஒலிக்கின்ற
கடல்,
குறை: வினைத்தொகை. குடக்கு-மேற்கு. குமரப்பெருமான்-முருகனாகிய
பெருமையையுடையவன். பெர்குட்டு-தாமரைக்
கொட்டை. தேவு-பிரமன்.
படைக்கு முதல்-படைப்புக்கு முதலாகிய பிரகிருதிமாயை.
அளிக்கும்-காக்கும்.
சங்கு ஆழி-சங்கும் சக்கரமும். படைத்த-கைக்கொண்ட, பெருமாள்-
பெருமையை ஆளுதலைப் பொருந்தியவன், திருமால்
(1)
சிவபெருமான்
உடல்வளை குழவி
மதியமும் நதியும்
உரகமும் ஒழுகு செஞ்சடைக் காட்டினர்
உமைமுலை குழைய மருவிய புனிதர்
உரைகொடு பரவு தொண்டரைக் காத்தவர்
உமிழ்திரை மகர சலதியில் விளையும்
உறுவிட வடவை கண்டமட் டேற்றினர்
உடைமணி கனக பரிபுர முரல
ஒருமுறை பவுரி கொண்டமெய்க் கூத்தினர்
வடவரை முதுகு நெளிநெளி
நெளிய
வரிசிலை யெனவொர் அம்பினைக் கோத்தவர்
மறுவறு முழுவெண் நிலவெழு முறுவல்
வளரொளி இருள்வ னங்கெடப் பூத்தவர
மருவிய சகள வடிவினர் அரிய
வடகலை தமிழ்வ ளம்பெறச் சேர்த்தவர்
|