மதுரையில் இறைவர் இரசத பொதுவர்
மணமலி பதயு கங்களைப் போற்றுதும்
இடவிய மதுர வரியளி குமுறி
இடறிய களப குங்குமத் தூட்பொதி
இமசலம் உழுகு கனகன விரகம்
எழுகுற வனிதை சிந்தையிற் சேர்ப்பனை
இடிபடு முரச முழவுடன் அதிர
எதிர்பொரு நிருதர் தம்படைப் போர்க்களம்
இடமற முதிய கழுதுகள் நடனம்
இடவடல் புரியு மொய்ம்பனைத் தூற்றிய
கடதட வழுவை முகமுள கடவுள்
கருணையின் முதிய தம்பியைப் பார்ப்பதி
கரமலர் அணையில் விழிதுயில் மருவி
களிபெறு குதலை மைந்தனைப் பூப்பயில்
கடிகமழ் தருவின் இறைமகள் புதிய
கலவியின் முழுகு கொண்களைப் போற்றிசெய்
கலைமகள் பரவு குமரனை மதுர
கவிதரு குரிசில் கந்தனைக் காக்கவே.
(அ-ரை) குழவி-இளமை. உரகம்-பாம்பு
: மார்பால் நகர்வது.
குழைய மருவிய புனிதர்-குழையும்படி தழுவிய தூயர். கச்சியில் கம்பை
யாற்றில் சிவபூசை யாற்றிய உமையம்மை, வெள்ளப் பெருக்கால் தான்
அமைத்து வழிபட்ட மணல் இலிங்கம்
கெடாத வண்ணம் மார்போடும்,
வளைக்கையோடும் தழுவிய வரலாறு ஈண்டு குறிக்கத் தக்கது. மகரசலதி-மகர
மீன்களையுடைய கடல். வடவை வடவைத்தீ. கனகபரிபுரம் முரல-பொற்சிலம்பு ஒலிக்க. பவுரி-கூத்துவகை.
முறுவல்-சிரிப்பு. இரசத
|