44 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
வேறு
கந்தத் தகட்டினர விந்தந் தனிக்கடவுள்
கற்பா யெனச்சுருதி நூல்
கண்டித் துரைத்திடவும் இந்தக் கரத்திலுரை
கற்பா லுரைத்தி யெனவே
அந்தப் பொருட்பகுதி அந்தத் தினைப்பகரும்
அப்போ வெறுத்து முனிவாய்
அஞ்சத் திருக்குமயன் அஞ்சச் சிறைக்குளிடும்
அப்பா சிறக்கும் அமலா
பந்தப் பிறப்பொழிய வந்தித் திருக்குமவர்
பற்றாக நிற்கு முதல்வா
பண்டைக் குடத்திலுறு முண்டச் சிறுத்தமுனி
பற்றாசை யுற்று மிகவாழ்
சந்தப் பொருப்பிறைவ செந்திற் பதிக்குமர
சப்பாணி கொட்டி யருளே
சங்கத் தமிழ்ப்புலவ துங்கக் கொடைக்குமர
சப்பாணி கொட்டி யருளே
(அ-ரை) கந்தம்-வாசனை.. இந்தக்கரத்தில்-இந்தப்
பிரணவ எழுத்தில். உரை கற்பால்-பொருளைப் படித்த விதத்தால். அந்தம்-முடிவு. ஆஞ்சத்து
இருக்கும் அயன்-அன்ன ஊர்தியில் அமரும் பிரமன். அமலன்-குற்றமற்றவன். பந்தம்-பாசம் சிறுமுனி-அகத்தியமுனி.
குறுமுனி.சந்தப் பொருப்பு-சந்தனமலை, பொதிகைமலை.
துங்கம்-உயர்ச்சி.
(39)
|