பக்கம் எண் :

முத்தப்பருவம்

47

    வளைக்குந் தமரக் கருங்கடலின்
வளைவாய் உகுத்த மணிமுத்துன்
வடிவேற் கறைபட் டுடல்கறுத்து
மாசு படைத்த மணிமுத்தம்

துளைக்குந் கழையிற் பருமுத்தம்
துளபத் தொடைமால் இதழ்பருகித்
தூற்றுந் திவலை தெறித்த முத்தம்
சுரக்கும் புயலிற் சொரிமுத்தம்

திளைக்குங் கவன மயிற்சிறையிற்
சிறுதூட் பொதிந்த குறுமுத்தஞ்
செந்நெல் முத்தங் கடைசியர்கால்
தேய்த்த முத்தஞ் செழுந்தண்தேன்

முளைக்குங் குமுதக் கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தந் தருகவே.

(அ-ரை)  தமரம்-ஒலி வளை-சங்க. கறை-களங்கம், கறுப்பு.  மாசு-அழுக்கு. துளைக்குங் கழை-துளைக்கப்படும் மூங்கில்.  துளபத்தொடைமால் - துளசி மாலையணிந்த திருமால்.  திவலை-துளி.  திளைக்கும்-நெருங்கம்.  கவனம்-வேகம்.  குமுதம்-ஆம்பல்.                                       

(42)

  கலைப்பால் குறைந்த பிறைமுடிக்குங்
கடவுள் உடலின் விளைபோகங்
கனலி கரத்தில் அளிக்க அந்தக்
கனலி பொறுக்க மாட்டாமல்