48 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
மலைப்பால் விளங்கஞ் சரவணத்தில்
வந்து புகுத ஓராறு
மடவார் வயிறு குலுளைந்து
மைந்தர் அறுவர்ப் பயந்தெடுப்பக்
கொலைப்பால் விளங்கும் பரசுதரன்
குன்றி லவரைக் கொடுசெல்லக்
கூட்டி அணைத்துச் சேரவொரு
கோலம் ஆக்கிக் கவுரிதிரு
முலைப்பால் குடித்த கனிவாயால்
முருகா முத்தம் தருகவே
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.
(அ-ரை) கலைப்பால் கலையின்
பகுதி. போகம் - இன்பமாகிய அக்கினிப் பொறி, கனலி - அக்கினிதேவன். மலப்பால் - மலையின்
பக்கம், பயந்து- பெற்று பரசுதரன் - மழுப்படையனான சிவபெருமான். கொபைால் - கொலைக்கூறு. கோலம்
- வடிவம்; இவ்வடிவு கந்தன் என்று அழைக்கப்படும்; கந்தன் - சேர்க்கப்பட்டவன். கவுரி - உமை
(43)
கத்துங் கடலில் நெடும் படவில்
கழியில் சுழியில் கழுநீரில்
கானற் கரையில் கரைதிகழுங்
கைதைப் பொரும்பில் கரும்பினங்கள்
தத்துங் கமலப் பசும்பொகுட்டிற்
சாலிக் குலையில் சாலடியில்
தழைக்குங் கதலி அடிமடல்
தழைவைத் துழுத முதுகுரம்பைக்
|