குத்துந் தரங்கப் புனற்கவரில்
குவளைத் தடத்தின் மடைவாயில்
குட்க்கூன் சிறுமுட் பணிலமொரு
கோடிகோடி யீற்றுளைந்து
முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
முருகா முத்தந் தருவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே.
(அ-ரை) படவு - தோணி, கைதைப்
பொதும்பு - தாழஞ்சோலை; சாலிக்குலை - நெற்கதிர், சாலடியில் - உழுசால் சென்ற வழியில், குரம்பை
- வரம்பை. குவளைத் தடம் - குவளைக் குளத்தில், ஈற்றுளைந்து - ஈற்றால் வருந்தி; கருவுயிர்த்து.
(44)
வயலும் செறிந்த கதலிவன
மாடம் செறிந்த கதலிவன
மலர்க்கா வெங்குந் தேனினிரை
மாலைதோறுந் தேனினிரை
புயலுஞ் செறிந்த கனகவெயில்
புடையே பரந்த கனகவெயில்
பொதும்பர் தோறு மோதிமமென்
புளினந் தோறு மோதிமஞ்செங்
கயலுஞ் செறிந்த கட்கடையார்
கலவி தரும்போர்க் கட்கடையார்
கருணைபுரியும் அடியாருன்
காதல் புரியும் அடியார்சீர்
முயலும் படிவாழ் திருச்செந்தூர்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே.
|