50 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை) கதலிவனம்:- (1) வாழைச்சோலை,
(2) கொடிக்கூட்டம். தேனின் நிரை:- (1) மதுவரிசை, (2) வண்டினம். கனக வெயில் (1) கல்நக
எயில். கல்மலையாகிய மதில் (2) பொற்கிரணம். பொதும்பர்-சோலை. புளினம் தோறும்-மணற்குன்றெங்கும்
ஓதிமம்-அன்னப்பறவை. கட்கடையார்- (1) கடைக்கண்களுடைய பெண்டிர். (2) போர் கட்கடையார் யுத்தத்திற்கு
நெருங்கார். அடியார்-தொண்டர். சீர்-புகழ், கீர்த்தி.
(45)
தொழுதுந் துதித்துந் துயரற்றிச்
சுரருக் கிறையுஞ் சுரரு முடன்
சூழ்ந்த கடம்பா டவியிலுறை
சொக்கக் கடவுள் தனைமூன்று
பொழுதும் பரவி எழுத்துச்சொற்
போலப் பொருளும் புகறியெனப்
புகலு மாறஞ் சிரட்டி திணைப்
பொருட்சூத் திரத்தின் பொருள்மயங்கா
தெழுதும் பனுவற் பரணன் முதல்
ஏழேழ் பெருமைக் கவிப்புலவர்
இதயங் களிக்க விருப்பமுடன்
இறையோன் பொருட்குப் பொருள்விரித்து
முழுதும் பகர்ந்த கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே.
(அ-ரை) சுரருக்கிறை-இந்திரன்.
சுரர்-தேவர். கடம்பாடவி-கடம்பமரக்காடு. சொக்கக்கடவுள்-சொக்கலிங்கம்.
|