பக்கம் எண் :

வள

வாரானைப்பருவம்

59

    வள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.

(அ-ரை) இரங்கி-வருந்தி. பரந்து-சென்று. எக்கி-ஒரு புறம் வற்றி வளைந்து. குழைந்து-வாடி. மகரக்குழை-மகர குண்டலம். குறுமூரல்-புன்சிரிப்பு. உமையாள் களபமுலை வள்ளத்தமுதுண்டு-பார்வதியின் களபமணிந்த கொங்கையினின்று ஒழுகிய பாலைக்  கிண்ணத்தில்  ஏந்திக்கொடுக்க  உண்டு;  இதனால்  உமைமுலை எவராலும்  வாய்வைத்து  உண்ணப் பெறாதாக உண்ணாமுலை யென்பர்.               

(56)

 வெண்மைச் சிறைப்புள் ஓதிமங்கள்
விரைக்கே தகையின் மடலெடுத்து
விரும்புங் குழவி யெனமடியின்
மீதே இருத்திக் கோதாட்டித்

திண்மைச் சுரிசுங் கினிற்குவளைத்
தேறல் முகந்து பாலூட்டிச்
செழுந்தாமரைநெட் டிதழ்விரித்துச்
சேர்த்துத் துயிற்றித் தாலாட்டப்

பெண்மைக் குருகுக் கொருசேவற்
பெரிய குருகு தன்வாயிற்
பெய்யும் இரையைக் கூரலகு
பிளந்து பெட்பின் இனி தளிக்கும்

வண்மைப் புதுமைத் திருச்செந்தூர்
வடிவேல் முரகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.