60 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை) சிறை-சிறகு. விரைக்கேதகை-மணம்
பொருந்திய தாழை. கோது ஆட்டி-குற்றம் போக்கி, திண்மை-உறுதி. தேறல்-தேன் துயிற்றி-தூங்கச்
செய்து. துயில் என்னும் தன்வினைப் பகுதியடியாகப் பிறந்த பிறவினையெச்சம். பெட்பின்-ஆசையுடன்.
(57)
ஓடைக் குளிர்தண் துளிப்பனியால்
உடைந்து திரையில் தவழ்ந்தேறி
ஒளிரும் புளினத் திடையொதுங்கி
உறங்குங் கமடம் தனைக்கடந்து
கோடைக் குளிர்காற் றடிக்கஉடல்
கொடுகி நடுங்கி ஊன்கழிந்த
குடக்கூன் பணிலத் துட்புகுந்து
குஞ்சுக் கிரங்கி இரைகொடுக்கும்
பேடைக் குருகக் கொருசேவற்
பெரிய குருகின் சிறைப்புறத்துப்
பிள்ளைக் குருகு தனையணைத்துப்
பிரச மடற்கே தகைப்பொதும்பின்
வாடைக் கொதுங்குந் திருச்செந்தூர்
வடிவேல முருகா வருகவே
வடிவேல் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
(அ-ரை) புளினத்திடை-மணல்மேட்டில்.
கமடம்-ஆமை. குடக்கூன்-குடம்போல்விளைந்த பேடை. பெடடை. இதன் எதிர்மொழி சேவல். புறத்து-இடத்து.
பிரசம்-தேன்.
(58)
|