62 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
சேரா நிருதர் குலகாலா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்
தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்றுன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடனப்
பாவா வாவென் றுனைப்போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பமுலை
வள்ளி கணவா வருகவே.
(அ-ரை) பேராதரிக்கும்-பெயரை
விரும்பும். பேறும்-பிரயோசனமும். பேராளா-புகழுடையவனே. பிள்ளைப் பெருமான்-இளையபெருமாள். நிருதர்குல
காலா-அசுரர் கூட்டத்துக் குக்காலனே. பாரா-பார்த்து, பரவிப்புகழ்ந்து-மிகவும் புகழ்ந்து. வழக்கு-முறை.
(60)
வேறு
கலைதெரி புகலி வளமுற மருவு
கவுணிய வருக வருகவே
கருணையின் உரிமை அடியவர் கொடிய
கலிகெட வருக வருகவே
சிலைபொரு புருவ வனிதையர் அறுவர்
திருவுள மகிழ வருகவே
சிறுதுளி வெயர்வு குதிகொள உனது
திருமுக மலர வருகவே
|