பக்கம் எண் :

மண

64

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    மணியிதழ் ஒழுகும் அமுதுகு குதலை
மழவிடை வருக வருகவே
வளையுமிழ் தரளம் அலையெறி நகரில்
வரபதி வருக வருகவே.

(அ-ரை) அரைமணி-அரையிற் கட்டியுள்ள மணிகள். முரலும்-ஒலிக்கும். அடியொலி-அடிபெயர்த்து வரும் முழக்கம். பரவ-போற்ற. பிணிமுகம்-மயில். அரியணை-சிங்காதனம். பிடி-உமையம்மை. பிடி பெறு களிறு-பெண் யானையான உமையவள் பெற்ற ஆண்யானை. குதலை-பொருள் புலப்படாத சொல்

(62)

-----

7. அம்புலிப்பருவம் 

கலையால் நிரம்பாத கலையுண் டுனக்கு நிறை
கலையுண் டிவன்தனக்குக்
களங்கமரு குறமான் உனக்குண்டு குறமான்
கருத்துண் டிவன்தனக்குத்

தொலையாத கணமுண் டுனக்குமங் கலகணத்
தொகையுண் டிவன்தனக்குத்
துளியமுத முண்டுனக் கிவனுக்கு மாறாத
சொல்லமுதம் உண்டுனக்குக்

கொலையா டராவழிப் பகையுண்டு கடுவிடங்
கொப்புளிக் குங்கட்செவிக்
கோளரா வைக்கொத்தி யெறியுமே காரமிக்
குமரனுக் குண்டுகண்டாய்