பக்கம் எண் :

66

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

  காமோ பெருக்கமென் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ யாடவாவே
அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
அம்புலீ யாடவாவே

(அ-ரை) மோகமண்டலம்-மோகபூமி. தொடுத்து-ஆரம்பித்து.             மண்டலத்தழலால்-மூலாதாரத்திலுள்ள அக்கினிமண்டலத்துத் தீயால். இனன் மண்டலத்து ஊடு இருதயகமலத்திலுள்ள சூரிய மண்டலத்தின் நடுவில். சோமோதயம்-சோம உதயம். சந்திரனுதித்தலையுடைய சோதி மண்டலமென. சீவமண்டலமாக துய்ய-தூய்மையான. ஏம்-மயக்கம் ஓ-நீங்கிய, பரம்-பிரமம், நிலை-நிற்றலையுடைய. ஈடேறுவர்-கடைத்தேறுவர்.                                          

(64) 

 முதிரும்இசை வரிவண் டலம்புகம லாலய
முகிழ்க்குமிரு நாலிதழ்க்குள்
முக்கோண நடுவிலொரு வட்டச் சுழிக்குள்மலர்
முகமண் டலத்துவெயிலால்

எதிருமிருள் அந்தகா ரப்படலை தள்ளிவந்
தெழும் இரவி மண்டலத்தில்
இன்புற்று நீவந் தொளிக்குமிடம் அந்தவான்
இரவிமண் டலமுடுக்கள்

உதிருமடு செருவிலிவன் வேலேறு பட்டவர்
உகந்தபெரு வெளியாகையால்
ஒள்ளமு துகுத்தபதி னாறுகலை கொள்ளுமுன்
உடலினுங் குறைபடாதோ