68 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை) வெறியார்-மணம்பொருந்திய.
தொடை-மாலை, தொடுத்தலுடையது: ‘ஐ’ செயப்படுபொருள் உணர்த்திற்று. தக்கன் - தட்சப்பிசாபதி.
அவன்தன்மகளைப் பரமசிவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். முழு முதற்கடவுளாகிய பரமசிவனுக்கு மரியாதை
செய்யாதிருந்தான் திருமால் தலைமையில் பிரமனைக் கொண்டு யாகம் செய்வித்தான், யாகத்தைக்
காணவந்த தன் மகளாகிய உமாதேவிக்கும் வெறுப்பு உண்டாக்கினான். பின் இது தெரிந்த பரமசிவன்
வீரபத்திரரை ஏவி யாகத்தை அழிப்பித்தார் - தேவர்கள் அவமானப் படுத்தப்பட்டனர். சூரியன்
பல்உடைந்தான். சந்திரன் மிதியுண்டான். தக்கன் தலை வெட்டுண்டு நெருப்பில் அழிந்தது. பின்
சிவபெருமான் இரங்கிக் குற்றம் செய்தவர்களை மன்னித்து எழுப்பினர். தக்கன் தலைக்கு ஆட்டுத்தலை
பொருத்தப்பட்டது. இதுவே தக்கன் செய்த வேள்விப்பயன். வெள்ளி - சுக்கிரன். அயிராவதப் பாசன்
- இந்திரன். சென்னி-தலை. வாணி-நாமகள். துண்டம்-மூக்கு. அழற்கடவுள்-அக்கினிதேவன். விண்புலவர்-தேவர்.
ஓர் வாய்-சிந்திப்பாய். ஓர் - பகுதி.
(66)
விடமொழுகு துளைமுள் எயிற்றுவன் கட்செவி
விரிக்கும் பணாடவியறா
மென்பொறி உடற்பெரும் பகுவாய் அராவடிவை
வெம்பசி எடுத்து வெம்பிக்
குடதிசைக் கோடையைப் பருகிக் குணக்கெழுங்
கொண்டலை அருந்திவாடைக்
கொழுந்தையுந் தென்றலையும் அள்ளிக் குடித்துக்
கொழுங்கதிரை உண்டதினியுன்
|