இடமொழிய வேறோர் இலக்கில்லை நீயதற்
கெதிர்நிற்க வல்லையல்லை
இவனுடன் கூடிவினை யாடிநீ யிங்கே
இருக்கலாம் இங்குவந்தால்
அடல்புனையு மயிலுண் டுனக்குதவி ஆகையால்
அம்புலீ ஆடவாவே
அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
அம்புலீ ஆடவாவே
(அ-ரை) வன்கட்செவி-வலிய
பாம்பு. பணாடவி-படக்கூட்டம். பகுவாய் - பிளந்த வாய். வை - வைக்கப்பட்ட. வெம்பி - வருந்தி.
கோடை - மேல்காற்று. கொண்டல் - கீழ் காற்று. வாடை - வடகாற்று. தென்றல் - தென்காற்று. குடக்கு+திசை
= குடதிசை, மேல்பால், குணக்கு-கிழக்கு. கொழுங்கதிரை-செழித்த கிரணங்களை, இலக்கு-குறிப்பு.
வல்லையல்லை - வல்லமையில்லா திருக்கின்றாய். அடல் புனையும்மயில் - மயிலுக்குப் பகையாவது
பாம்பு. மயில் உதவியால் பாம்பின் அச்சம் ஒழிவாய்.
(67)
பண்டுபோல் இன்னமுதம் இன்னங் கடைந்திடப்
பழையமந் தரமில்லையோ
படர்கடற் குண்டகழி அளறாக வற்றியிப்
பாரினில் திடரானதோ
விண்டலத் தமரர்களும் அமரேச னுஞ்சேர
வீடிநீ டந்தகார
மேவியெழு பகிரண்ட கூடம்வெளி யானதோ
விடமொழுகு நெட்டெயிற்று
|