பக்கம் எண் :

மண

70

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    மண்டுவா சுகிதுண்ட மானதோ இன்னமொரு
வாலிக்கு வாலில்லையோ
மதியிலா மதியமே இவன்நினைந் தாலெந்த
வகைசெலா தாகையானீ

அண்டர்நா யகனெங்கள் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே.

(அ-ரை) பண்டு-முன். இன்னமுதம்-இனிய அமுதம். மந்தரம்-மத்தாக விளங்கியமந்தரமலை. அளறு -சேறு. திடர் - மேடு. அமரேசன்-இந்திரன். வீடி - இறந்து. வாசுகி-அட்ட நாகங்களில் ஒன்று. துண்டமானதோ-துண்டிக்கப்பட்டதோ வாலி-கிட்கிந்தை மன்னன்; பாற்கடல் கடைந்தபோது தேவாசுரர்க்கு தவியாயிருந்தவன்; இராமனால் அம்பெய்து கொல்லாப்பட்டவன் சிவபூசைச்செல்வன்; இராவணனை வாலில் தூக்கிச்சென்று அங்கதன் தொட்டிலிற் கட்டி விளையாட்டுப் பொம்மையாக்கியவன். மதியிலாமதி - அறிவில்லாத சந்திரனே. வகை-வழி.                                  

(68) 

    வட்டமா கத்துள்வெளி வடிவுகொள லாலென்று
மானைத் தரித்திடுகையால்
மந்தா கினித்தரங் கத்துவளம் எய்தலால்
மன்னுங் கணஞ்சூதலால்

இட்டமொடு பேரிரவில் வீறுபெற லாலுலகில்
எவருந் துதித்திடுதலால்
இரவின்கண் ணுறுதலால் இடபத்தி லேறாலால்
ஏமமால் வரையெய்தலால்