இறுமென மருங்கி ரங்க இன்புறு
முறுவலாடிய
கோமளத் தாற்பெ ருத்தவள்
முறைமுறை
முழங்கு கின்ற கிண்கிணி
பரிபுரம்
அலம்பு செம்ப தம்புரை
முளரிநாண்மலர் வாழ்வெனப் போற்றி நிற்குதும்
உரியபதி னெண்க
ணங்க ளஞ்சது
மறைமுனிவ ரும்ப ரிந்து நின்கழல்
உறுதிதானென நாவெடுத் தேத்தி நித்தலும்
உளமிக
மகிழ்ந்து செங்க ரங்களின்
மலர்கொடு வணங்கி யஞ்சல் என்றெமை
உடைமையாயருள் நீயெனக் காத்த நட்பனை
உடுமுக டதிர்ந்து
விண்த லங்களும்
அரிய
பகிரண்ட மும்பி ளந்திட
உதறுதோகை மயூரனைத் தோற்ற முற்றெழும்
உபநிடத
மந்த்ர தந்த ரந்தனில்
அசபையி லடங்கும் ஐம்பு லன்களில்
உவகை கூரும னோகரக் கூத்த னைப்பொரு
தரியலர்
நெருங்க செங்க ளம்புகு
நிசிரர்
துணிந்த வெம்ப றந்தலை
தழுவுபாடல் விசாகனைப் பாற்க டற்றரு
தரளநகை
செங்க ருங்கண் இந்திரை
குறமகள்
மணம்பு ணர்ந்த திண்யுய
சயிலமோகன
மார்பனைத் தோட்டி தழ்ப்பொதி
தழைமுகை
யுடைந்து விண்ட ரும்பிய
புதுநறவு சிந்து பைங்க டம்பணி
தருணசீதள வாகனைக் கோட்ட கத்துயர்
சரவண மிலங்க
வந்த கந்தனை
முருகனை விளங்கு செந்தில் வந்திடு
சமரமோகன வேலனைக் காத் தளிக்கவே.
|