(அ-ரை) விரை-வாசனை தடம்-பெரிய,
வரைத்தடம் புரை - மூங்கிலையுடைய மலைபோன்ற. மேல்நாள்-மற்காலம், தேசிகன்-குரு.
(101)
மாதுநாயகம் எனைவடி வுடையசீர்
வள்ளிநா யகமண்ணில்
ஈது நாயகம் எனவுனை யன்றிவே
றெண்ணநா யகம்உண்டோ
போது நாயகன் புணரியின் நாயகன்
பொருப்புநா யகன்போற்றி
ஓது நாயக செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
(அ-ரை) மாதுநாயகம்-பெண்ணரசி. நாயகம்-தலைமை.
போது நாயகன் - பிரமன். புணரியின் நாயகன்-பாற்கடலில் உறங்கும் திருமால் பொருப்பு-மலை. நாயகன்-சிவன்.
(102)
தக்க பூசனைச் சிவமறை யோர்பெருந்
தானநா யகர் தம்பேர்
திக்க னைத்தினும் எண்முதல் இமையவர்
தேவர்தந் திருமேனி
மிக்க மாலினை தருபவர் அடியவர்
மின்னனார் சமயத்தோர்
|