தமிழ்நாட்டுக்கு வடபுறமாதலின் விந்தம் காளிக்குரியதென்க. புயத்து இருத்தி - தன்தோள்களில் வைத்து, உடைவாள், கைவாள். அரை-இடுப்பு. ஒளிரவைத்து - விளங்கும்படிபூண்டு. (13) யானையேற்றம் 245. | ஈரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே | | இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான் ஓரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வனென அன்னதுப யின்றே. |
(பொ-நி.) "இந்திரன் வாரணம் - உகைத்து வென்றுவரும்யான் ்வாரணம்` உகைத்து வெல்வ" னெனப் பயின்று; (எ-று.)
(வி-ம்.) ஈர் இரு - இரண்டு இரண்டு; நான்கு. மருப்பு-தந்தம். வாரணம் - யானை. உகைத்து - ஏறிச் செலுத்தி. ஒன்னலர் - பகைவர். இந்திரனினும் ஏற்றமுடைமை குறித்தது. அன்னது - யானையேற்றம். (14) குதிரையேற்றம் 246. | இற்றைவரை யுஞ்செல வருக்கனொரு நாள்போல் | | ஏழ்பரியு கைத்திரு ளகற்றிவரு மேயான் ஒற்றைவய மானடவி இத்தரைவ ளாகத்து உற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. |
(பொ-நி.) "அருக்கன் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றிவரும். யான் ஒற்றைமா நடவி இருள் தீர்ப்பன்" என அது பயின்று; (எ-று.) (வி-ம்.) செலவு சுற்றிச் செல்லுதல், அருக்கன் - ஞாயிறு. பரி - குதிரை. வயம்-வெற்றி. மான்- குதிரை. நடவி-நடத்திச் செலுத்தி. வளாகம் - பரந்த இடம். இருள்-துன்ப இருள். பயின்று-கற்று. (15) படைக்கலப் பயிற்சி 247. | சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே | | தன்னுடைய ஆனவத னாலவை நமக்குத் திக்குவிச யத்தின்வரு மென்றவை பயிற்றிச் செங்கைமலர் நொந்தில சுமந்தில தனக்கே. |
|