(பொ-நி.) படை ஐந்தும் தன்னுடைய ஆன அதனால் வரும் என்று, செங்கைமலர் நொந்தில; சுமந்தில; (எ-று.) (வி-ம்.) படைஐந்து; தண்டு, வில், வாள், சங்கு, சக்கரம், திருமாலே குலோத்துங்கனாதலின், "தன்னுடைய" வாயின. திக்கு விசயம்- திசைதோறும் சென்று தன் ஆற்றலை உணர்த்தல். நொந்தில - வருந்தலில்லை. சுமந்தில -கைக்கொள்ள வில்லை. (16) கலைநூற் பயிற்சி 248. | உரைசெய்பல கல்விகளின்உரிமைபல | | சொல்லுவதென் உவமையுரை செய்யின் உலகத்து அரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை அவையவைகள் வல்ல பிறகே. | (பொ-நி.) கல்விகளின் உரிமை சொல்லுவதென் உவமை உரைசெய்யின், அரசர் உளரல்லர் என அவைபுகழ, கலை வல்ல பிறகு; (எ-று.) (வி-ம்.) உரைசெய் - மேம்பாடாகச் சொல்லப்படுகின்ற, வினைத்தொகை. உரிமை-குலோத்துங்கனுக்கு உரிமையாந் தன்மை. உவமை உரை - ஒப்புரைத்தல். அவை - சபை. அவை அவைகள் -அவ்வவற்றிலும், வல்ல-வல்லமைகொண்ட. (17) இளவரசானமை 249. | இசையுடனெ டுத்தகொடி அபயனவ | | னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே திசையரச ருக்குரிய திருவினை முகப்பதொரு திருவுளம டுத்தருளியே. | (பொ-நி.) அபயன் இளவரசில் வைத்த பிறகு, திருவினை முகப்பதொரு திரு உளம் அடுத்தருளி; (எ-று.) (வி-ம்.) இசை - புகழ். அபயன்: இராசேந்திர சோழன் மகனான வீரராசேந்திரன். அவனி-உலகு. இள அரசு -இளவரசுப் பட்டம். திரு-செல்வம். முகத்தல் - கொள்ளை கொள்ளுதல். திரு உளம் - உயர் எண்ணம். அடுத்து அருளி - உண்டாகி. (18) |