பூணூல் அணிந்தமை 242. | திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் | | மங்கலநா ணென்ன முந்நூற் பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். |
(பொ-நி.) மார்பின் மங்கல நாண் என்ன, முந்நூல் ஒளிர, இரண்டாவது பிறப்பும் பிறந்து சிறந்த பின்னர்; (எ-று.) (வி-ம்.) திரு - அழகு. மலர் மடந்தை - திருமகள். மங்கல நாண் - தாலிக்கயிறு. முந்நூல் - பூணூல். பூணூல் அணிந்த பின் இரண்டாவது பிறப்பாம் என்க. (11) மறை பயின்றமை .243. | போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த | | அஞ்ஞான்று புகன்று சென்ற வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. |
(பொ-நி.) மாண் உருவாய், புகன்று சென்ற வேதங்கள்நான்கினையும், கேட்டருளிக் கற்று, (எ-று.) (வி-ம்.)போதம் - அறிவு; மாண் உரு - பிரமசாரி உரு. புவி இரந்த - உலகை ஏற்று வாங்கிய. (12) உடைவாள் ஏந்தல் 244. | நிறைவாழ்வைப் பெறல்தமக்கும் அணித்தென்று | | நிலப்பாவை களிப்ப விந்தத் துறைவாளைப் புயத்திருத்தி உடைவாளைத் திருவரையின் ஒளிர வைத்தே. | (பொ-நி.) நிலப்பாவைகளிப்பு, விந்தத்து உறைவாளைப் புயத்து இருத்தி; உடைவாளை அரையின் வைத்து. (எ-று.) (வி-ம்.) நிறைவாழ்வு - குறைவற்ற வாழ்க்கை. நிலப்பாவை - மண்மகள்; அணித்து - அருகில் உளது. விந்தத்து உறைவாள் - காளி, ஊருக்கு வடக்கே காளி கோயில் போல், |