(பொ-நி.) மாயன் இவன் என்று தெளிவெய்த, ஐம்படைதரித்து; (எ-று.) (வி-ம்.) நிலமாது - மண்மகள். படர் - துன்பம். மாயன் - (திருமால்) கண்ணன். தண்டு - தடி. தனு - வில். வாள் - வாட்படை. பணிலம் - சங்கு. நேமி - சக்கரம். தன் - திருமாலின். ஐம்படை - ஐம்படைத்தாலி. (8) குலோத்துங்கன் நடைபயின்றமை 240. | சினப்புலிவ ளர்ப்பதொர் | | சிறுப்புலியு மொத்தே திசைக்களிற ணைப்பதொர் தனிக்களிறு மொத்தே அனைத்தறமும் ஒக்கஅடி வைக்கஅடி வைத்தே அறத்தொடும றத்துறை நடக்கநடை கற்றே. |
(பொ-நி.) புலியும் ஒத்து; களிறும் ஒத்து, அறம் அடிவைக்க அடிவைத்து, மறத்துறை நடக்க நடைகற்று. (எ-று.) (வி-ம்.) சிறுப்புலி - புலிக்குட்டி. அணைப்பது - தழுவிவளர்ப்பது. ஒக்க - குலோத்துங்கனோடு ஒரு சேர. மறத்துறை - வீரச் செயல்களின் பகுதிகள். நடக்க-உலகத்தே நடக்க, நடைகற்று - நடக்கப் பழகி. (9) மழலை மொழிந்தது 241. | தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே | | தானுமுல கத்தவர் தமக்கருள் சுரந்தே தூயமனு வுஞ்சுருதி யும்பொருள் விளங்கிச் சொற்கடெ ரியத்தனது சொற்கடெரி வித்தே. | (பொ-நி.) முலை சுரக்கவருநாள், அருள் சுரந்து, மனுவும் சுருதியும் விளங்கித்தெரிய, சொற்கள் தெரிவித்து. (எ-று.) (வி-ம்.) சுரக்க வருநாள் - பாலருந்தும் பருவம், சுருதி - மறை, மழலைப்பருவத்தே மொழிந்த சொற்களிலும் மனுநூல், மறைநூல் அரும்பொருள் தோன்றின என்க. (10) |