பக்கம் எண் :

அவதாரம்97


     (பொ-நி.) மழை பொழிய; அதுகண்டு, தேவி, குல மகனைக்  கையால்
எடுத்துக் கொண்டு; (எ-று.)

     (வி-ம்.)அலர் -  மலர். தேவி - மனைவி. குலமகள் -  தன்  சிறந்த
மகள்(அம்மங்கை.) கோகனதம் -தாமரை.                            (5)

பாட்டியார் மொழிந்தது     

237.அவனிபர்க்குப் புரந்தரனு அடையாளம்
     அவயவத்தின் அடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி இரவிகுலம்
   பாரிக்கத் தகுவன் என்றே.

     (பொ-நி.)    அடையாளம்   நோக்கி, "மகனாகி    இரவிகுலம்
பாரிக்கத்தகுவன்" என்று. (எ-று.)

     (வி-ம்.) அவனிபர் - அரசர், புரந்தரன் - இந்திரன், அடைவு-வரிசை.
எமக்கு-சோழ குலத்தினராகிய எமக்கு. இரவி -ஞாயிறு. பாரித்தல்-வளர்த்தல்.
                                                           (6)

இருகுலத்தோரும் மகிழ்ந்தது

238.திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
     செய்யபரி திக்குழவி ஐயனிவ னென்றுந்
தங்களின்ம கிழ்ந்திருகு லத்தரசர் தாமுந்
   தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே.

     (பொ-நி.)  இருகுலத்தரசரும்  திங்களின்   இளங்குழவி    என்றும்,
பரிதிக்குழவி  என்றும்   மகிழ்ந்து உவப்பதோர் தவப் பயன்  ஒத்து; (எ-று.)

     (வி-ம்.)இருகுலம்; தாய்தந்தையர் குலம்.தங்களின் மகிழ்ந்து - தமக்குள்
களிப்புற்று. தவப்பயனுக் கேற்பவே புதல்வர் பிறத்தலால்,அத் தவப்பயனையே
உவமை கூறினார்.                                              (7)

ஐம்படைத்தாலி அணிந்தமை

239.பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
    படர்களையும் மாயனிவ னென்றுதெளி வெய்தத்
தண்டுதனு வாள்பணிலம் நேமியெனு நாமத்
   தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே.