பக்கம் எண் :

அவதாரம்103


     (பொ-நி.)  புகை  எரி  குவிப்ப,  வயிராகரம்  எரிமடுத்து.  அரசர்
கரம் குவிப்பதொரு கடவரை  தனைக்  கடவியே; (எ-று.)

     
(வி-ம்.)  புரம் - திரிபுரம். அது  இது என -அது ஒப்பது இது என.
திகிரி - வட்டவடிவமான. வயிராகரம்; அது ஒப்பது. கரம் எதிர் குவித்தல்-
கைகுவித்து வணங்கல். கடவரை-யானை.                        (21)

    களங்கொண்டது     

253.குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
      கடுப்பஎதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத்
தளமுதிர வெட்டி ஒரு செருமுதிர
     ஒட்டினர்கள் தலைமலைகு வித்த ருளியே.

     (பொ-நி.)   கடல்கடுப்ப,   குதிரைத்தளம்   வெட்டி,  தலைமலை
குவித்தருளி; (எ-று.)

     
(வி-ம்.)  குளம் - குளத்தின்  நீர்.  முதிர  - அழிய. மெத்துதல் -
நிரம்புதல். குரைகடல் - ஒலியுடைய கடல். கடுப்ப-ஒப்பாக. குறுகலர்கள் -
பகை மன்னர்கள். தளம் - படை.   செருமுதிர - போர்மிக்கு.  குளத்தை
அழித்துக்   கடல் தன்னகப்படுத்தல்   போல்.  குலோத்துங்கன்  படை,
பகையரசர்  படையை யழித்துக் களத்தைத் தன் கைப்படுத்திற் றென்க.
                                                        (22)     

சக்கரக் கோட்டம் அழித்தமை

254.மனுக்கோட்டம் அழித்தபிரான்  
      வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம்
     பட்டதுசக் கரக்கோட்டம்.

     (பொ-நி.)     வளவர்        பிரான்     புருவத்தனுக்கோட்ட,
சக்கரக்கோட்டம், நமன்கோட்டம்  பட்டது;  (எ-று.) 

     
(வி-ம்.)  மனு  -  மனிதர்கள்.  கோட்டம்  - தீநெறி. புருவத்தனு-
புருவ  வில். கோட - வளைக்க.  நமன்-யமன்.  சக்கரக்கோட்டம்-சக்கரக்
கோட்டத்திலுள்ள பகைவீரர்கள்; இடவாகு பெயர். பட்டது-சேர்ந்தனர்.
                                                        (23)