குலோத்துங்கன் விளக்கமும் பகைவர் அழிவும் 255. | சரிக ளந்தொறுந் தங்கள்ச யமகள் | | தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும் பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங்கொ டுத்தனர் பார்த்திபர். |
(பொ-நி.) சயமகள் தன்னை அபயன்கைப் பிடித்தலும், பார்த்திபர் பாரி போகம் கொடுத்தனர் ; (எ-று.) (வி-ம்.) சரிதல் -குலைந்து பின்னிடுதல். தங்கள்-பகையரசர் தங்கள். சய மகள் - வெற்றி மகள். கைப்பிடித்தல் - திருமணம் புரிதல். தனராசி - பொருட்குவியல். பாரி போகம்-சீதனம் (பாரி-மனைவி. போகம்- இன்பநுகர்ச்சிப் பொருள்கள்) தாம் வளர்த்த மகளைக் கொடுத்தோர் சீதனமும் உடன் கொடுத்தனர் என்க. (24) இதுவும் அது 256. | பொருத ராதிபர் கண்கள் சிவந்தில | | போரி லோடிய கால்கள் சிவந்தன விருத ராச பயங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. |
(பொ-நி.) பொருதராதிபர் கண்கள் சிவந்தில; கால்கள் சிவந்தன; செங்கையில் வேல்சிவந்தது; கீர்த்தி வெளுத்தது; (எ-று.) (வி-ம்.) தராதிபர் - அரசர். போரில் - போர்க்களத்தில். விருதராசபயங்கரன்; குலோத்துங்கன், வேல்சிவந்தது - பகைவரைக் கொன்றமையால் வேல் குருதிபடிந்து செந்நிற மேற்றது. கீர்த்தி வெளுத்தது என்றது, அதனால் அவன் பரந்த புகழ் களங்கமற்றதாதலால் அதனை வெண்மை நிறமாகக் கூறுதல் சான்றோர் மரபு. ஆதலால், ழுவெளுத்தது ' என்றார். (25) வீரராசேந்திரன் இறந்தமை 257. | மாவுகைத் தொருதனி அபயன் இப்படி | | வடதிசை மேற்செல மன்னர் மன்னவன் தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். |
|