பக்கம் எண் :

அவதாரம்105


     (பொ-நி.)   அபயன்   வடதிசைமேற்  செல,  மன்னர்  மன்னவன் விசும்பின்  மேற் செல,  தென்றிசைக்குப்   புகுந்தன்மை   செப்புவாம் ;
(எ-று.)

     (வி-ம்.)   மா - குதிரை.  அபயன்  -  குலோத்துங்கன்.   மன்னர்
மன்னவன்   - வீரராசேந்திரன்    (இராசேந்திரன் மகன்.)   விசும்பின்
மேற்செல  -  இறந்தான் என்றபடி. தென்திசை - சோழநாடு.
(26)

சோழநாடு அரசிழந்த இயல்

258.மறையவர் வேள்வி குன்றி
      மனுநெறி யனைத்தும் மாறித்
துறைகளோ ராறும் மாறிச்
     சுருதியும் முழக்கம் ஓய்ந்தே.

     (பொ-நி.)  வேள்வி  குன்றி,  மனுநெறி  மாறி,  துறைகள்  ஆறும்
மாறி, சுருதியும் ஓய்ந்து. (எ-று.)

     (வி-ம்.)   துறைகள்   ஆறு  -  சிட்சை,   கற்பம்,   வியாகரணம்,
நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம், சுருதி-மறை.                 (27)

இதுவும் அது

259.சாதிக ளொன்றோ டொன்று
      தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லாது
     ஒழுக்கமும் மறந்து போயே.

     (பொ-நி.)  சாதிகள்  தலைதடுமாறி,  யாரும்  நெறியில்  நில்லாது
ஒழுக்கமும் மறந்துபோய், (எ-று.)

     (வி-ம்.)  தலைதடுமாறுதல்,  கண்டவாறு  கலத்தல்,  ஓதிய  நெறி-
நூல்களில் கூறப்பட்ட ஒழுக்கவகைகள்.                        (28)

இதுவும் அது

260.ஒருவரை யொருவர் கைம்மிக்கு
      உம்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி
     அரண்களு மழிய ஆங்கே,