பக்கம் எண் :

அவதாரம்107


     (பொ-நி.)   வேலை      நான்கும்     வேதங்கள்    நான்கும்
ஆர்ப்பப்புவனங்கள் வாழ்த்த அபிடேகம் செய்து, (எ-று.)

     (வி-ம்.)  விரிபுனல் - நீர்ப்பரப்பு  வேலை-கடல்.  திரு அபிடேகம்-
மங்கல நீராட்டு. புவனம்-உலகம். ஆர்ப்ப-முழங்க.                (32)    

மறையவர் முடிசூட்டியது

264.அறைகழலரச ரப்பொழுது
      அடிமிசை யறுகெ டுத்திட
மறையவர் முடியெ டுத்தனர்
     மனுநெறி தலையெ டுக்கவே.

     (பொ-நி.)  அரசர்  அறுகு  எடுத்திட,  மனு  நெறி  தலை எடுக்க,
மறையவர் முடி எடுத்தனர், (எ-று.)

     (வி-ம்.) அறைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டை. அடிமிசை-கால்களின்
மீது. அறுகு எடுத்திட - அறுகு இட்டு. வாழ்த்த. முடி: குலோத்துங்கனுக்குச்
சூட்டும் முடி. தலை எடுக்க-மேலோங்க.                       (33)

     முடிபுனை நீர் ஆட்டுதல்

265.நிரைமணி பலகு யிற்றிய
      நெடுமுடி மிசைவி திப்படி
சொரிபுன லிடைமு னைத்தன
     துறைகளின் அறம னைத்துமே.

     (பொ-நி.)   முடிமிசை   சொரிபுனலிடை    அறம்   அனைத்தும்
முளைத்தன, (எ-று.)

     (வி-ம்.) நிரைமணி - வரிசையாகிய  இரத்தினம். குயிற்றிய -பதித்த.
புனல் - நீர்,  அறத்துறை  அனைத்தும்  என  இயைக்க.  முளைத்தன -
தோன்றலாயின.                                           (34)

புலிக்கொடி எடுத்தமை

266.பொதுவற வுலகு கைக்கொடு
      புலிவளர் கொடியெ டுத்தன
அதுமுதற் கொடியெ டுத்தலும்
     அமரர்தம் விழவெ டுக்கவே.