(பொ-நி.) புகழ் நிலவில், கடல்கள் அடைய அரிதுயிலும்படி விளங்கின, (எ-று.) (வி-ம்.) அரி - திருமால். விளங்கின -பாற்கடல்போல் விளங்கின என்க. கவின் -அழகு. கவினின் விளங்கின என்க. ஒரு கரு - ஒப்பற்ற கருநிறமுள்ள. கலி - துன்பம். கழுவி உலவு; கழுவியதனால் உலவுகின்ற என்க. புகழ் நிலவு: புகழாகிய நிலவு. (38) இதுவும் அது 270. | நிழலில டைந்தன திசைகள் | | நெறியில டைந்தன மறைகள் கழலில டைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். |
(பொ-நி.) திசைகள் நிழலில் அடைந்தன; மறைகள் நெறியில் அடைந்தன; உதியர் கழலில் அடைந்தனர்; செழியர் கடலில் அடைந்தனர், (எ-று.) (வி-ம்.) நிழல் - வெண்கொற்றக்குடையின் நிழல், திசைகள் - எல்லாப் பக்கங்களும். கழல்-பாதம். உதியர்-சேரர். கடலில் அடைந்தனர்- கடல் தீவுள் சென்று மறைந்து வாழ்ந்தனர். செழியர்-பாண்டியர். (39) இதுவும் அது 271. | கருணையொ டுந்தன துபய | | கரமுத வும் பொருள் மழையின் அரணிய மந்திர வனல்கள் அவையுத வும்பெரு மழையே. |
(பொ-நி.) தனது உபயகரம் உதவும் பொருள் மழையின், மந்திர அனல்கள் பெருமழை உதவும், (எ-று.) (வி-ம்.) கருணையொடு - அருளோடு, இரக்கமுடன். தனது: குலோத்துங்கனது. உபயம் - இரண்டு. கரம் - கை. பொருள் மழை- பொருளாகிய மழை. மழையின் - மழையைப் போல, அரணி - தீக்கடை கோல். அரணிய அனல், மந்திர அனல் எனத் தனித்தனி இயைக்க. அரணிய மந்திர அனல் - வேள்வித்தீ. வேள்வியால் மழை வளம் பெருகுமென்பது துணிவு. (40) |